×

வேட்பாளர்கள் மீது புகார் அளிக்க வேண்டுமா ? – இதோ தேர்தல் ஆணையத்தின் செயலிகள்

வாக்காளர்கள், வேட்பாளர்கள், மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சில செயலிகள் மற்றும் இணைய தளங்களை வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், வாக்காளர்கள், வேட்பாளர்கள், மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சில செயலிகள் மற்றும் இணைய தளங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை, CVigil வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் புகார் அளிக்க CVigil என்ற ஆண்ட்ராய்ட் செயலியை வாக்காளர்கள்
 

வாக்காளர்கள், வேட்பாளர்கள், மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சில செயலிகள் மற்றும் இணைய தளங்களை வெளியிட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், வாக்காளர்கள், வேட்பாளர்கள், மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சில  செயலிகள் மற்றும் இணைய தளங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை,

CVigil 

வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை  விதிமுறைகளை மீறினால் புகார் அளிக்க CVigil என்ற ஆண்ட்ராய்ட் செயலியை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்தல் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீதும் கட்சிகள் மீதும் இந்த செயலி மூலமாக புகார்கள் அளிக்கலாம்.

புகார் அளிக்கப்பட்ட 90 நிமிடங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் புகார் அளித்தவரிடம் தெரிவிக்கப்படும்.

Election Monitoring Dashboard

வாக்குச்சாவடி தொடர்பான களவிபரங்களை அறிந்து கொள்ள election monitoring dashboard என்ற இணையத்தினையும் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Voter Helpline Mobile App 

இந்த செயலியை வாக்காளர்கள் பெயர் சரிபார்த்தல், புதிய வாக்களர்கள் பெயர் சேர்த்தல், தேர்தல் ஆணையம் அளிக்கும் முக்கிய அறிவிப்புகளை அறிந்து கொள்ளுதல் போன்ற அனைத்து தேவைகளுக்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமாதன்  

இந்த செயலி மூலமாக வாக்காளர்களால் தேர்தல் தொடர்பான அனைத்து பரிந்துரைகளையும் அறிந்து கொள்ள இயலும். மேலும் புகார்களையும் வாக்காளர்களால் அளிக்க இயலும். வாக்களர்களுக்கு மட்டும் அல்ல வேட்பாளர்களுக்கும் சில செயலிகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

வேட்பாளர்களுக்கான செயலி – சுவிதா 

சுவிதா செயலி மூலம் வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களின் நிலை பற்றி அறிந்திட பயன்படுத்தலாம். இந்த செயலிகள் வாயிலாக அரசியல் கட்சிகளின் பரப்புரைகளையும் அறிந்து கொள்ள இயலும்.