×

வெளியே வரும் சசிகலா! – அமைச்சர்களுக்கு வார்னிங் கொடுத்த இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா உள்ளிட்டவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். சசிகலா சிறை தண்டனை முடிந்து வெளியே வர உள்ள நிலையில் அவரை அமைச்சர்கள் யாரும் சென்று சந்திக்கக் கூடாது என்று எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா உள்ளிட்டவர்கள் சிறை
 

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா உள்ளிட்டவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

சசிகலா சிறை தண்டனை முடிந்து வெளியே வர உள்ள நிலையில் அவரை அமைச்சர்கள் யாரும் சென்று சந்திக்கக் கூடாது என்று எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா உள்ளிட்டவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். நான்கு ஆண்டு காலம் இந்த ஆண்டுடன் முடிய உள்ளது. அக்டோபர் மாதம் அவரது தண்டனைக் காலம் முடிவடைய உள்ளதால் முன்கூட்டியே அவர் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் திருமணத்தில் பங்கேற்க சசிகலா பரோலில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று திவாரகன் பேசியதை காட்டி சசிகலா வருவதை டி.டி.வி.தினகரன் தடுத்துவிட்டடதாக கூறப்படுகிறது. 
இந்த திருமண விழாவுக்காக சசிகலா வெளியே வருவார்… அவரை சந்தித்து எப்போதுமே நாங்கள் உங்கள் விசுவாசிகள்தான் என்று காட்ட பல அமைச்சர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சசிகலா வராததால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அக்டோபர் அல்லது அதற்கு முன்னதாகவே சசிகலா வெளியே வந்துவிடுவார். வந்ததும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிப்பார். ஒன்று அமைச்சர்கள் அணி மாற வேண்டும், இல்லை என்றால் ஒவ்வொருவர் பற்றிய ரகசியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து அவர்கள் அரசியல் வாழ்வே அஸ்தமனமாகிவிடும் என்ற பயம் உள்ளுக்குள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அணி மாற அமைச்சர்கள் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவை சந்திக்க வேண்டாம், நாம் இணைந்து கட்சியை நடத்தலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவுடன் தொடர்பு வைக்கக் கூடாது என்று கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

சசிகலா வந்தால் அவரிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு, அவருக்கு கீழ் உண்மையான விசுவாசிகளுள் ஒருவராக எடப்பாடி பழனிசாமியே மாறிவிடுவார்… அப்படி இருக்கும்போது அவரது உத்தரவை எப்படி பின்பற்றுவது என்று கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மக்களைக் கவரும் தலைவனாக தன்னைக் காட்டிக்கொள்ள நடை, உடை, பாவனைகளை மாற்றுவதற்கான சிறப்புப் பயிற்சியை எடப்பாடி பழனிசாமி பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.