×

வெளியே வந்த உடனேயே சரவெடி காட்டிய சிதம்பரம்; மத்திய அரசு மீது பாய்ச்சல்!

திகார் சிறையிலிருந்து நேற்று வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதார நிலை பற்றி அதிரடியான கருத்தைப் பகிர்ந்துள்ளார். திகார் சிறையிலிருந்து நேற்று வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதார நிலை பற்றி அதிரடியான கருத்தைப் பகிர்ந்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்தநிலையில் நாடாளுமன்றத்துக்கு வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்துகொண்டனர்.
 

திகார் சிறையிலிருந்து நேற்று வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதார நிலை பற்றி அதிரடியான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

திகார் சிறையிலிருந்து நேற்று வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பொருளாதார நிலை பற்றி அதிரடியான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்தநிலையில் நாடாளுமன்றத்துக்கு வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது அவர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “106 நாட்களுக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன். 75 லட்சம் காஷ்மீரிகள் சுதந்திரம் ஆகஸ்ட் 4ம் தேதி பறிக்கப்பட்டுள்ளது. நமது சுதந்திரத்துக்காகப் போராட வேண்டியுள்ளது. இந்த அரசு அனுமதித்தால் நான் ஜம்மு காஷ்மீர் செல்வேன். 

பொருளாதாரத்தை சீர்படுத்த வழி தெரியாததால் மோடி அரசு தவறான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி பாரதிய ஜனதாவால் யூகிக்க முடியவில்லை. ரூ.1000, 500 நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற பயங்கரவாதத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 8 சதவிகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 5.5 ஆக குறைந்தது. ஆனால், நாட்டின் பொருளாதாரம் பற்றி மோடி பேசுவதே இல்லை. வழக்கம்போல அவர் மவுனம் காக்கிறார். பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தெரியாத அரசாக மோடி அரசு உள்ளது.

உற்பத்தி, சிறு-குறு தொழில் என அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதற்கு எல்லாம் அரசின் தெளிவற்ற தன்மையே காரணம். பொருளாதார மந்த நிலையிலிருந்து இந்த அரசால் மீளவே முடியாது. இவ்வளவுக்கு மத்தியிலும் 5 சதவிகித வளர்ச்சியை நாடு எட்டியதே பெரிய விஷயம், நம்முடைய அதிர்ஷ்டம்” என்றார்.

அவரிடம் வழக்கு பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு, “அது பற்றி பேச முடியாது. என்னுடைய ஆட்சிக் காலத்தில் எந்த தவறும் இல்லை எல்லாம் தெளிவாக உள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அது பற்றி பேச முடியாது” என்றார்.