×

விரைவில் அத்திவரதரை தரிசனம் செய்ய அகோரிகள், நிர்வாண சாமியார்கள் தமிழகத்திற்கு வருவார்கள்: திருமா விமர்சனம்!

விரைவில் பல அகோரிகள் தமிழகத்திற்கு வருவார்கள் என சிதம்பரம் எம்.பி திருமாவளவன் தெரிவித்துள்ளார் காஞ்சிபுரம்: விரைவில் பல அகோரிகள் தமிழகத்திற்கு வருவார்கள் என சிதம்பரம் எம்.பி திருமாவளவன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
 

விரைவில் பல அகோரிகள் தமிழகத்திற்கு வருவார்கள் என சிதம்பரம் எம்.பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்

காஞ்சிபுரம்: விரைவில் பல அகோரிகள் தமிழகத்திற்கு வருவார்கள் என சிதம்பரம் எம்.பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.  காஞ்சியை  நோக்கிய மக்களிடம் படையெடுப்பு இது பெரியார் மண் என்பதைப் பொய்யாக்குகிறதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. 

இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற மெரினா புரட்சி திரைப்பட அறிமுக விழாவில் கலந்து கொண்ட  திருமாவளவன் பேசும் போது,  காஞ்சிபுரத்தில் கொலை, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக மக்கள் என்னிடம் புகார் கூறினர். அத்திவரதரை தரிசனம் செய்ய வெகுநாட்களில் கங்கை நதியில் உள்ள  அகோரிகள் தமிழகத்திற்கு வருவார்கள். நிர்வாண சமிக்கையர்கள் வரலாம். ஏன்? அவர்களை நீங்கள் வணங்கக் கூட வாய்ப்புள்ளது. இங்கு  எல்லாவற்றிற்கும் இடம் தர காத்திருக்கிறார்கள். எந்த புரட்சியும் அமைப்பு சார்ந்து நிகழும்போதுதான் வெற்றி பெறுகிறது. அரசியல் இல்லாத எந்த புரட்சியும் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் இல்லை. மெரினா புரட்சி வரலாற்றுப் புரட்சி தான். ஆனால்  அதிலும் அரசியல் இருக்கிறது. அதனால் அறிவு சார்ந்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்’ என்றார்.