×

விபத்துகளை தவிர்க்க புதிய 8 உயர்மட்ட மேம்பாலங்கள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கரூர்: அதிகம் விபத்து நடக்கும் 8 இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில், தவுட்டுப்பாளையம்,
 

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர்: அதிகம் விபத்து நடக்கும் 8 இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம்  நடைபெற்றது. அதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

தேசிய நெடுஞ்சாலையில், தவுட்டுப்பாளையம், மண்மங்களம், ஆண்டான் கோவில் பிரிவு, அரவக்குறிச்சி பிரிவு, கோடாங்கிபட்டி உள்ளிட்ட 8 இடங்களில் அதிக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அதனைத் தடுக்கும் வகையில்  அந்த பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.