×

விநியோக மையங்களில் ஏழைகளுக்கு சப்ளை செய்யும் உணவை சாப்பிடவே முடியாது… கெஜ்ரிவால் அரசு மீது குற்றச்சாட்டை சுமத்தும் காங்கிரஸ்..

டெல்லியில் விநியோக மையங்களில் ஏழைகளுக்கு டெல்லி அரசு சப்ளை செய்யும் உணவை சாப்பிடவே முடியாது மற்றும் வழங்கப்படும உணவு அளவும் போதுமானதாக இல்லை என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடியை கருத்தில் கொண்டு ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக டெல்லி அரசு உணவு முகாம்களை அமைத்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான உணவு முகாம்கள் அமைத்து உணவு சப்ளை செய்து வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் தினந்தோறும் 10 முதல்
 

டெல்லியில் விநியோக மையங்களில் ஏழைகளுக்கு டெல்லி அரசு சப்ளை செய்யும் உணவை சாப்பிடவே முடியாது மற்றும் வழங்கப்படும உணவு அளவும் போதுமானதாக இல்லை என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியை கருத்தில் கொண்டு ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக டெல்லி அரசு உணவு முகாம்களை அமைத்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான உணவு முகாம்கள் அமைத்து உணவு சப்ளை செய்து வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் தினந்தோறும் 10 முதல் 12 லட்சம் பேருக்கு உணவு அளிக்க தேவையான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி அரசு செய்யும் என கடந்த மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார்.

தற்போது டெல்லி அரசின் உணவு சப்ளையை காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. வடகிழக்கு டெல்லி பாபர்புர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உணவு விநியோகம் செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவர் சந்தீப் தீட்சித் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லி அரசு தனது உணவளிக்கும் நோக்கத்தில் இதயத்தையும், ஆன்மாவையும் ஈடுபடுத்தாமல் செய்வதால்,  ஆம் ஆத்மி அரசு விநியோக மையங்களில் சப்ளை செய்யும் உணவு சாப்பிட முடியாத மற்றும் வழங்கப்படும் உணவு அளவும் போதுமானதாக இல்லை என தெரிவித்தார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி கூறுகையில், டெல்லி அரசாங்கத்தால் சப்ளை செய்யப்படும உணவில் ஊழல் இருப்பதாக தெரிகிறது. இதுதான் உணவின் மோசமான தரத்துக்கு காரணம். உண்மையை வெளிக்கொணர விசாரணைக்கு லெப்டினல் கவர்னர் உத்தரவிட வேண்டும். டெல்லி காங்கிரஸ் பிரிவு டெல்லி அரசாங்கத்தை போலல்லாமல் சமூக விலகல், வெப்ப சோதனை மற்றும் லாக்டவுன் விதிமுறைகளை பின்பற்றி ஏழை மக்களுக்கு சத்தான, ஆரோக்கியமான மற்றும் அதிகமான உணவை வழங்கி வருகிறது என தெரிவித்தார்.