×

வாரிய தலைவர் பதவி… தே.மு.தி.க-வை சமாதானப்படுத்த எடப்பாடி அனுப்பிய தூது!

தமிழகத்திலிருந்து காலியான ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தி.மு.க சார்பில் மூன்று பேர் போட்டியிட்டனர். அ.தி.மு.க சார்பில் மூன்று பேர் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் ஒரு இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க வலியுறுத்தியது. ஆனால், டெல்லித் தலைவர்களைச் சுற்றி வந்து எம்.பி பதவியை வாங்கிக்கொண்டார் ஜி.கே.வாசன். மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்கப்படாத நிலையில் தே.மு.தி.க-வை குளிர்விக்க அதற்கு வாரியத் தலைவர் போன்ற பதவிகள் வழங்கத் தயாராக உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த்துக்கு ஓ.பி.எஸ்,
 

தமிழகத்திலிருந்து காலியான ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தி.மு.க சார்பில் மூன்று பேர் போட்டியிட்டனர். அ.தி.மு.க சார்பில் மூன்று பேர் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் ஒரு இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க வலியுறுத்தியது. ஆனால், டெல்லித் தலைவர்களைச் சுற்றி வந்து எம்.பி பதவியை வாங்கிக்கொண்டார் ஜி.கே.வாசன்.

மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்கப்படாத நிலையில் தே.மு.தி.க-வை குளிர்விக்க அதற்கு வாரியத் தலைவர் போன்ற பதவிகள் வழங்கத் தயாராக உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த்துக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தூது அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்திலிருந்து காலியான ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தி.மு.க சார்பில் மூன்று பேர் போட்டியிட்டனர். அ.தி.மு.க சார்பில் மூன்று பேர் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் ஒரு இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தே.மு.தி.க வலியுறுத்தியது. ஆனால், டெல்லித் தலைவர்களைச் சுற்றி வந்து எம்.பி பதவியை வாங்கிக்கொண்டார் ஜி.கே.வாசன்.

இந்த நிலையில் கூட்டணியில் தொடர்வதாக தே.மு.தி.க கூறினாலும் அ.தி.மு.க மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் பிரேமலதா விஜயகாந்த். வரும் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் இந்த கோபம் வெளிப்படும் என்று கூறி வருகிறாராம். இதனால், தே.மு.தி.க-வை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஜி.கே.வாசனுக்கு எப்படி மேலிடம் நெருக்கடி கொடுத்தது, அதை மீறி தே.மு.தி.க-வுக்கு சீட் வழங்கியிருந்தால் அ.தி.மு.க அரசு என்ன மாதிரியான பிரச்னைகளை சந்தித்திருக்கும் என்று பிரேமலதாவை சந்தித்த அ.தி.மு.க தூதர் விளக்கினாராம். மேலும், எம்.பி பதவி இல்லாவிட்டால் என்ன, தமிழக அரசின் மிக முக்கிய வாரியங்கள் உள்ளிட்ட பதவிகளில் ஒன்றை தே.மு.தி.க-வுக்குத் தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். 

இதனால், தே.மு.தி.க-வின் கோபம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி பரிந்துரைத்த பதவிகளில் எதை தேர்வு செய்வது என்று ஆலோசனையில் இறங்கிவிட்டாராம் பிரேமலதா. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அ.தி.மு.க-வினர் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.