×

வாங்க.. முதல்வரை மாற்றி விடலாம்! கெஞ்சும் காங்கிரஸ்! அடம் பிடிக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்….. தொடரும் பரபரப்பு…..

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ. 104 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 78 தொகுதிகளை வென்றது. மதசார்ப்பற்ற ஜனதா தளம் 37 இடங்களை கைப்பற்றியது. 104 தொகுதிகள் இருந்தும் பா.ஜ.வால் ஆட்சியை பிடிக்கவில்லை. நாம ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை பா.ஜ. ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் 37 இடங்களை வென்ற மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது. கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ. 104 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 78
 

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ. 104 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 78 தொகுதிகளை வென்றது. மதசார்ப்பற்ற ஜனதா தளம் 37 இடங்களை கைப்பற்றியது. 104 தொகுதிகள் இருந்தும் பா.ஜ.வால் ஆட்சியை பிடிக்கவில்லை. நாம ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை பா.ஜ. ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் 37 இடங்களை வென்ற மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது.

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ. 104 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 78 தொகுதிகளை வென்றது. மதசார்ப்பற்ற ஜனதா தளம் 37 இடங்களை கைப்பற்றியது. 104 தொகுதிகள் இருந்தும் பா.ஜ.வால் ஆட்சியை பிடிக்கவில்லை. நாம ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை பா.ஜ. ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் 37 இடங்களை வென்ற மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது. மேலும், தான் அதிக இடங்களை வென்ற போதிலும் முதல்வர் பதவியை அந்த கட்சிக்கு விட்டு கொடுத்தது காங்கிரஸ்.

இதனையடுத்து கர்நாடாகவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. புதுசா கல்யாணம் ஆன தம்பதிகள் மாதிரி சில மாதங்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் போனது. ஆனால் அதன் பிறகு தினமும் ஏழரைதான். இதற்கிடையே பா.ஜ.வும் கூட்டணி அரசை கவிழ்க்க ரகசியமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசும்,மதசார்ப்பற்ற ஜனதா தளமும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால் அவர்களுக்கு படுதோல்விதான் பரிசாக கிடைத்தது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. அதன் உச்சகட்டமாக ஆளும் கூட்டணி அரசை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினர். இதனால் காங்கிரஸ்-மதசார்ப்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒருபுறம், ஆளும் கட்சி தனது பெருன்பான்மையை நிருபிக்க வேண்டும் என பா.ஜ. வலியுறுத்த தொடங்கியது.

மறுபுறம், அதிருப்தி எம்.எல்,ஏ.க்களை சமாதானம் செய்ய காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதற்கு எல்லாம் அதிருப்தி எம்.எல்,ஏ.க்கள் அசைந்து கொடுக்கவில்லை. முதல்வர் குமாரசாமியின் செயல்பாடுகள் மற்றும் அவரது சகோதரர் ரேவண்ணாவின் தலையீடு பிடிக்காமல்தான் பதவியை ராஜினாமா செய்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

முதல்வர் குமாரசாமி வேறுவழியில்லாமல் கடந்த வியாழமைக்கிழமை சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆனால் அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் என குமாரசாமி கூறினார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா நம்பிக்கை ஒரே நாளில் நடத்த வேண்டும் என கூறினார். ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் கடைசி முயற்சியாக, வேண்டும் என்றால் முதல்வரை மாற்றி விடலாம். மதசார்ப்பற்ற தள அரசு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க தயாராக உள்ளது. மேலும் சித்தாராமையா, ஜி.பரமேஷ்வரா மற்றும் நான் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க மதசார்ப்பற்ற ஜனதாதளம் சம்மதம் தெரிவித்துள்ளது என காங்கிரஸின் சிவகுமார் அறிவித்தார். ஆனாலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. அதனால் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கவிழும் அபாயம் அதிகரித்துள்ளது.