×

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இது குறித்து திமுக தலைவர் உட்படப் பலர் உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதன் படி, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், அந்தந்த சட்டப்பேரவை தொகுதி வாக்காளர்
 

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இது குறித்து திமுக தலைவர் உட்படப் பலர் உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதன் படி, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. 

இந்நிலையில், அந்தந்த சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால் தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் www.nsvp.in என்ற இணையதளத்தின் மூலம் தங்களது பெயரைச் சேர்க்க விண்ணப்பத்தை அளிக்கலாம் என்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் மண்டல அலுவலகங்களிலும், சென்னையைத் தவிரப் பிற மாவட்டங்களில் உள்ளவர்கள் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பத்தை அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட பின்னரே உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படும் என்றும் புதிதாகப் பெயர் சேர்ப்பு மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு அடுத்த மாதம் 18 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.