×

வரலாற்று தவறை சரிசெய்யவே குடியுரிமை திருத்தம் சட்டம் கொண்டு வரப்பட்டது…. மோடி தகவல்

நாடு பிரிவினையின் போது நிகழ்ந்த வரலாற்று தவறை சரிசெய்யும் நோக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது என பிரதமர் மோடி தகவல் தெரிவித்தார். டெல்லி நேற்று தேசிய மாணவர் படையின் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தேசிய மாணவர் படை சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அவர்களது நிகழ்த்திய வீர தீர செயல்கள் மற்றும இதர நிகழ்ச்சிகளை மோடி கண்டுகளித்தார். சிறந்த மாணவர்களுக்கு விருதும் வழங்கினார்.
 

நாடு பிரிவினையின் போது நிகழ்ந்த வரலாற்று தவறை சரிசெய்யும் நோக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது என பிரதமர் மோடி தகவல் தெரிவித்தார்.

டெல்லி நேற்று தேசிய மாணவர் படையின் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தேசிய மாணவர் படை சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அவர்களது நிகழ்த்திய வீர தீர செயல்கள் மற்றும இதர நிகழ்ச்சிகளை மோடி கண்டுகளித்தார். சிறந்த மாணவர்களுக்கு விருதும் வழங்கினார். அந்த கூட்டத்தில் மோடி பேசுகையில் கூறியதாவது:

பிரச்சினைகளை ஒத்தி போடக் கூடாது. அவற்றை எதிர்கொள்ளுவதோடு, தீர்க்க வேண்டும் என நாட்டின் இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர். நாடு அமைதியாக இருக்கிறது ஆனால் என்ன நடக்கிறது, பல பத்தாண்டுகளாக பொய்கள் எப்படி வாக்கு வங்கியாக எப்படி மாறுகிறது என்பதை முழுமையாக புரிந்து கொண்டுள்ளது.  அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் ஆர்வம் காரணமாக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கின்றனர். ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மை பெண்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தபடுவதை அந்த கட்சிகள் பார்ப்பது கிடையாது.

நாடு பிரிவினையின் போது நிகழ்ந்த வரலாற்று தவறை சரிசெய்யும் நோக்கத்தில்தான் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. பாகிஸ்தானில் சுகாதார பணிகளுக்கு முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.