×

வயநாட்டில் ராகுல்காந்தி! தொகுதி மக்களுக்கு உதவ பிரதமரிடம் கோரிக்கை!

கனமழையால் பாதிக்கப்பட்ட தனது தொகுதி மக்களைச் சந்திக்க, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட நேரிலேயே வந்துவிட்டார். நிலச்சரிவு காரணமாக ஒரு குக்கிராமமே அழிந்துப்போன மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பாரா பகுதிக்கு ஞாயிறன்று சென்றார் ராகுல். எந்த புண்ணியவான் கொடுத்த ஐடியாவோ தெரியவில்லை, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் நின்றார் ராகுல் காந்தி. இல்லை என்றால் பிரதமர் பதவியும் இல்லாமல், கட்சித்தலைவர் பதவியும் இல்லாமல், குறைந்தபட்சம் எம்.பியாகவும்கூட முடியாமல் போயிருந்திருக்கும். சும்மா சொல்லக்கூடாது ராகுல்காந்தியையும், கனமழையால் பாதிக்கப்பட்ட தனது தொகுதி மக்களைச் சந்திக்க,
 

கனமழையால் பாதிக்கப்பட்ட தனது தொகுதி மக்களைச் சந்திக்க, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட நேரிலேயே வந்துவிட்டார். நிலச்சரிவு காரணமாக ஒரு குக்கிராமமே அழிந்துப்போன மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பாரா பகுதிக்கு ஞாயிறன்று சென்றார் ராகுல்.

எந்த புண்ணியவான் கொடுத்த ஐடியாவோ தெரியவில்லை, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் நின்றார் ராகுல் காந்தி. இல்லை என்றால் பிரதமர் பதவியும் இல்லாமல், கட்சித்தலைவர் பதவியும் இல்லாமல், குறைந்தபட்சம் எம்.பியாகவும்கூட முடியாமல் போயிருந்திருக்கும். சும்மா சொல்லக்கூடாது ராகுல்காந்தியையும், கனமழையால் பாதிக்கப்பட்ட தனது தொகுதி மக்களைச் சந்திக்க, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட நேரிலேயே வந்துவிட்டார். நிலச்சரிவு காரணமாக ஒரு குக்கிராமமே அழிந்துப்போன மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பாரா பகுதிக்கு ஞாயிறன்று சென்றார் ராகுல்.

அதிகம் பாதிக்கப்பட்ட வடகேரளாவின் வயநாடு, கோழிக்கோடு, மற்றும் மலப்புரம் பகுதிகளில் இதுவரை 37,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தாலும், கனமழைக்கு 12 பேர் இறந்ததை தவிர்க்க முடியவில்லை. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தனி. நிவாரணப் பணிகளைப் பார்வையிட்ட ராகுல், பணிகள் குறித்து திருப்தி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட தன் தொகுதி மக்களுக்கு உதவுமாறு பிரதமரிடம் கேட்டதாகவும், அனைத்து உதவிகளையும் அளிக்கத் தயார் என பிரதமர் உறுதி அளித்திருப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு திரும்பும்முன், கனமழை பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை ராகுல் நேரில் பார்வையிட உள்ளார்.