×

லண்டனில் இதயத்தை உறிஞ்சிய ஜெயலலிதாவின் டாக்டர்… வெளிநாட்டில் நடந்த எடப்பாடி ரகசியம்..!

கிங்ஸ் மருத்துவமனைக்கு சென்று சில ஒப்பந்தங்கள் போட்டது மட்டும் தான் அறிவிப்பு செய்தி. ஆனால், அவருக்கு அங்கு ஆஞ்சியோ சிகிச்சை நடந்தது அறிவிக்கப்படாத செய்தி. லண்டன், அமெரிக்கா என எடப்பாடி பழனிசாமி 13 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்க்கப் போய் அவரது உடல் நலத்தையும் மருத்துவமனையில் கவனித்து வந்த ரகசியம் இப்போது வெளியாகி இருக்கிறது. இதயப் பிரச்னையால் அவ்வப்போது அவதிப்பட்டு வந்தார் முதல்வர். இதனை பல்வலி, கால் வலி எனக்கூறி சமாளித்து
 

கிங்ஸ் மருத்துவமனைக்கு சென்று சில ஒப்பந்தங்கள் போட்டது மட்டும் தான் அறிவிப்பு செய்தி. ஆனால், அவருக்கு அங்கு ஆஞ்சியோ சிகிச்சை நடந்தது அறிவிக்கப்படாத செய்தி.

லண்டன், அமெரிக்கா என எடப்பாடி பழனிசாமி 13 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்க்கப் போய் அவரது உடல் நலத்தையும் மருத்துவமனையில் கவனித்து வந்த ரகசியம் இப்போது வெளியாகி இருக்கிறது. 

இதயப் பிரச்னையால் அவ்வப்போது அவதிப்பட்டு வந்தார் முதல்வர்.  இதனை பல்வலி, கால் வலி எனக்கூறி சமாளித்து வந்தனர் அவரது அடிப்பொடிகள். இதனால் கலக்கத்தில் இருந்த அவர் வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  அதற்காகவே அவர் தனது முதலில் செல்லும் இடமாக தேர்வு செய்யப்பட்ட நாடு லண்டன். 

அங்கு கிங்ஸ் மருத்துவமனைக்கு சென்று சில ஒப்பந்தங்கள் போட்டது மட்டும் தான் அறிவிப்பு செய்தி. ஆனால், அவருக்கு அங்கு ஆஞ்சியோ சிகிச்சை நடந்தது அறிவிக்கப்படாத செய்தி. ஆமாம்.. இந்த சிகிச்சையை மேற்கொண்டது யார் தெரியுமா? அப்பல்லோவில் ஜெயலலிதாவிற்கு மருத்துவம் பார்க்க லண்டனில் இருந்து வந்த ரிச்சர்ட் பீலே. அவர் பணியாற்றும் மருத்துவமனை தான் இந்த கிங்ஸ் மருத்துவமனை.

 

அத்தோடு அமைச்சர்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளிநாடு சென்று எடப்பாடியுடன் இணைது கொண்டாலும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை தன்னுடனேயே அழைத்துச் சென்றார் எடப்பாடி. அவருடன் மருத்துவத்துறை செயலாளர், மற்றும் குழு சென்றதையும் கவனிக்க வேண்டும்.     

அமைச்சர் விஜயகாஸ்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர். ஆங்கிலம் பேசக்கூடியவர். ஆகையால் அவரை உடன் அழைத்துச் சென்றுள்ளார் எடப்பாடி எனக் கூறுகிறார்கள்.  ஆஞ்சியோ லண்டனில் ஒரு முறையும், அமெரிக்காவில் இருக்கும்போது ஒரு முறையும் நடந்துள்ளது. லண்டனில் இதைச் செய்த ரிச்சர்ட் பீலே அமெரிக்காவுக்கு மீண்டும் வரவழைக்கப்பட்டு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறுகிறார்கள்.  எடப்பாடி தனது வெளிநாட்டு பயணத்தின் போது தினமும் அவரது வீடியோ வெளி வந்து கொண்டிருந்ததே பிறகு எப்பாடி இந்த சிகிச்சை நடந்திருக்கும் என்கிற சந்தேகம் எழலாம்.

பொதுவாக பிரதமரோ, முதல்வரோ அரசு முறைப்பயணமாக வெளிநாடு சென்றால் பத்திரிக்கையாளர்களையும் அழைத்துச் செல்வது நடைமுறை. ஆனால், எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்கள் யாரையும் அழைத்துச் செல்லவில்லை. அவரது ஆட்களை வைத்தே நடந்த நிகழ்ச்சிகளை வீடியோவாக எடுத்து தனது டவிட்டர் பக்கங்களில் வீடியோவை பதிவிட்டு வந்தது எடப்பாடி அட்மின். அந்த வீடியோக்களில் எடப்பாடி பழனிசாமி தினமும் கலந்து கொண்டதைப்போல அவ்வப்போது வெளியிட்டு வந்தனர். 

ஆனால், சில நாட்கள் ரெஸ்ட் எடுத்து சிகிச்சை பெற்றுக் கொண்டே அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அந்த வீடியோக்களின் மூலம் அவர் தினமும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக பரப்பப்பட்டதாக கூறுகிறார்கள்.  இந்த ரகசியம் வெளியே கசிந்து விடக்கூடாது என்கிற ஒரே காரணத்தால் பத்திரிக்கை- ஊடகவியலாளர்களை தவிர்த்துள்ளனர். 

அடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீஎசெல்வம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்களை தன்னுடன் அழைத்துச் செல்வேன் என அவர் அழுத்தம் திருத்தமாக கூறினார். அதற்கான காரணம் இப்போது புரிகிறதா?  இப்படித்தான் கோட்டை வட்டாரத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது.  

இந்த டாப் நியூஸை வெளியிட, டாப் தமிழ் நியூஸுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை.