×

ரூ52 லட்சம் காலி! ஓபிஎஸும்,அவரது எம்பி மகனும் அரசியல்ல பிஸியானதால அனாதைகளாய் நிற்கும் தொகுதி மக்கள்!

தமிழகத்தின் முக்கியமான மாவட்டமாக இருக்கிறது தேனி… பல்வேறு அரசியல் சிறப்புகளையும் பெற்றது ஆண்டிபட்டி தொகுதி. முதல்வர்களை (?) வழங்கிய தொகுதியும் கூட. ஆனால், துணை முதல்வர் ஓபிஎஸும், ஆளும் கட்சி சார்பில் ஒரேயொரு எம்பியாக தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் சென்றிருக்கிற அவரது மகனும் வலம் வருகிற ஆண்டிபட்டி அருகே நரசிங்கபுரம் கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுளையாக இரண்டாயிரத்து சொச்ச வாக்குகள்! விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவையே பிரதான தொழிலாக இருந்து வருகிற இந்த
 

தமிழகத்தின் முக்கியமான மாவட்டமாக இருக்கிறது தேனி… பல்வேறு அரசியல் சிறப்புகளையும் பெற்றது ஆண்டிபட்டி தொகுதி. முதல்வர்களை (?) வழங்கிய தொகுதியும் கூட. ஆனால், துணை முதல்வர் ஓபிஎஸும், ஆளும் கட்சி சார்பில் ஒரேயொரு எம்பியாக தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் சென்றிருக்கிற அவரது மகனும் வலம் வருகிற ஆண்டிபட்டி அருகே நரசிங்கபுரம் கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுளையாக இரண்டாயிரத்து சொச்ச வாக்குகள்! 

விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவையே பிரதான தொழிலாக இருந்து வருகிற இந்த கிராமத்தில் நெல், வாழை, தென்னை, பூக்கள் உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. ஏதோ… அவர்கள் வகையில் அவர்களுடைய வாழ்க்கை நன்றாக சென்றுக் கொண்டிருந்த நிலையில், இருந்த நல்ல சாலையையும் புதுப்பித்து தருகிறோம் என்று சொல்லி ரூபாய் 52 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. வேக வேகமாக வந்த ஆட்கள் நல்ல சாலையில் குதறியெடுத்து கொத்து பரோட்டா போட்டார்கள் அதன் பின், பணிகள் சரிவர செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அச்சாலையில் செல்கின்ற பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகள் உள்பட பலர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நல்லா இருக்கிற ரோட்டை இப்படி பண்ணிப்புட்டாங்க… புதிசா ரோடும் போடலை.. தினம் தினம் ஸ்கூலுக்குப் போற புள்ளைக இப்படி கரடு முரடா இருக்கிற கருங்கற்கள்ல நடந்து தான் போகுதுங்க… ஆத்திர அவசரத்து ஆம்புலன்ஸ் கூட ஊருக்குள்ள வரமுடியாது… இன்னும் எத்தனை உயிரை பலி வாங்கிட்டு ரோடு போடுவாங்களோ’ என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.