×

ராஜேந்திர பாலாஜிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வேணும்… கதறும் ஆதரவாளர்கள்..!

அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உயர் பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்கள். நாங்குநேரி இடைத்தேர்தலில் களக்காடு கருவேலங்குளம் கிராமத்தில் தங்கியிருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்திக்க அருகிலுள்ள கேசவநேரி கிராமத்தைச் சேர்ந்த சிலர் சென்றிருக்கிறார்கள். இரவில் 9 மணிக்கு மேல் சந்திக்க வந்த அவர்கள் ரேஷன் கடை வேண்டும் என்று கோரிக்கை வைக்க, குறைவான வீடு உள்ள பகுதிக்கு எப்படி ரேஷன் கடை கொடுக்க முடியும்? தாசில்தாரிடம்
 

அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உயர் பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்கள்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் களக்காடு கருவேலங்குளம் கிராமத்தில் தங்கியிருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்திக்க அருகிலுள்ள கேசவநேரி கிராமத்தைச் சேர்ந்த சிலர் சென்றிருக்கிறார்கள். 

இரவில் 9 மணிக்கு மேல் சந்திக்க வந்த அவர்கள் ரேஷன் கடை வேண்டும் என்று கோரிக்கை வைக்க, குறைவான வீடு உள்ள பகுதிக்கு எப்படி ரேஷன் கடை கொடுக்க முடியும்? தாசில்தாரிடம் மனு கொடுத்தீர்களா?  அந்த மனுவின் நகலை என்னிடம் காலையில் கொண்டு வந்து கொடுங்கள். இப்போது சாப்பிட்டு போங்கள் விரட்டினார். இந்த சம்பவம் நடந்து வாரக்கணக்கில் நகர்ந்து விட்டது.

இந்நிலையில் நெல்லை பர்கிட் மாநகரத்தை சேர்ந்த சிலர் பால்வளத்துறை அமைச்சரின் மாதிரி உருவம் தாங்கிய முகமூடி அணிந்து நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ராஜேந்திர பாலாஜி  மீது அவதூறு பரப்பப்படுவதாகவும், அவரது உருவ படத்தினை அவமதித்து இணையதளம் வழியாக தனிமனித தாக்குதல் நடத்தியும் கேலி சித்திரங்கள் போட்டும் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உயர் பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்கள். அதை படித்த அதிகாரிகள் எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியாமல் உணவு நேரத்தில் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.