×

ரஜினியால் பலன் அடைந்தவர் கருணாநிதி… பீதி அடைபவர் மு.க.ஸ்டாலின்..!

கருணாநிதி எப்போதுமே இருவரையுமே நெருக்கத்திலேயே வைத்திருந்தார். ரஜினியால் பலன் அடைந்தவர் கருணாநிதி. வருகிற தேர்தல் ரஜினிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே தான் போட்டி. இரண்டாவது மூன்றாவது இடத்தை எதிர்க்கட்சி தலைவர் பதவியை யார் கைப்பற்றுவது என்பதிலும் போட்டி இருக்கும். ஜெயலலிதா எப்போதும் ரஜினியையும், கமலையும் எந்த காலத்திலும் அதிமுகவிடம் அண்டவிடாமல் தள்ளியேதான் வைத்திருந்தார். அந்த கட்சி தொண்டர்களும் எப்போதுமே நெருக்கம் காட்டியதில்லை. ஆனால் கருணாநிதி எப்போதுமே இருவரையுமே நெருக்கத்திலேயே வைத்திருந்தார். ரஜினியால் பலன் அடைந்தவர் கருணாநிதி. அதிலும் கடைசி
 

கருணாநிதி எப்போதுமே இருவரையுமே நெருக்கத்திலேயே வைத்திருந்தார். ரஜினியால் பலன் அடைந்தவர் கருணாநிதி.

வருகிற தேர்தல் ரஜினிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே தான் போட்டி. இரண்டாவது மூன்றாவது இடத்தை எதிர்க்கட்சி தலைவர் பதவியை யார் கைப்பற்றுவது என்பதிலும் போட்டி இருக்கும். ஜெயலலிதா எப்போதும் ரஜினியையும், கமலையும் எந்த காலத்திலும் அதிமுகவிடம் அண்டவிடாமல் தள்ளியேதான் வைத்திருந்தார்.

அந்த கட்சி தொண்டர்களும் எப்போதுமே நெருக்கம் காட்டியதில்லை. ஆனால் கருணாநிதி எப்போதுமே இருவரையுமே நெருக்கத்திலேயே வைத்திருந்தார். ரஜினியால் பலன் அடைந்தவர் கருணாநிதி. அதிலும் கடைசி ஐந்து ஆண்டுகள் மாதம் ஒரு விழா நடத்தி கமல், ரஜினி இருவருக்கும் இடையில் அமர்ந்து சினிமா நடிகைகளின் ரெக்கார்ட் டான்ஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். 

கருணாநிதி உடலை அண்ணா சமாதிக்குள் வைக்க இருவரும் என்ன குதிகுதித்தார்கள். ரஜினி கமல் இருவரால் சிதறப்போவது திமுக வாக்குகள்தான். எம்ஜிஆர், ஜெயலலிதா, அதிமுக, இரட்டைஇலை என்பது கருணாநிதியையே கதறடித்த ஒரு சக்ஸஸ் ஃ பார்முலா. அவ்வளவு சுலபத்தில் அதன் வாக்கு வங்கி கரையாது.

அன்று எல்லோருக்கும் நன்கு பரிச்சியமான எம்.ஜி.ஆர் என்ற தனி மனிதன் ஒருவரே வெற்றிக்கு பார்முலா. ஊடகங்கள் இந்த அளவுக்கு இல்லை. வெள்ளித்திரையின் பிம்பம் நிஜ உலகிலும் அப்படியே இருக்கும் என்ற ஒரு அபரிமிதமான நம்பிக்கை படிக்காத மக்கள் மத்தியில் இருந்தது. அதுதான் அவர் வெற்றிக்கு முக்கிய காரணம். 

இன்று அப்படியா? மக்களை திசை திருப்பும் ஊடங்கங்கள், விளம்பரங்கள், சமூக வலைத்தளங்கள், இணைய தளம் என்று ஒரு தொழில் நுட்ப போர் மக்கள் மனதை வெல்வதற்கு மக்கள் மீதே தொடுக்கப் படுகிறது. அந்த போர் என்னும் காட்டாற்று வெள்ளத்தில் எத்தனையோ விஷயங்கள் அடித்து செல்லப்படலாம். நல்ல விஷயங்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்கலாம். பழைய கதை போன்று இனி வரும் காலத்தை நாம் கணிக்க இயலாது.