×

ரஜினி அரசியலுக்கு வராததற்கு பாஜக காரணமா?- குஷ்பு

சம்பத்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாயத்திரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், நடிகைகள் குஷ்பு மற்றும் சுஹாசினி ஆகியோர் கலந்துகொண்டு ‘மாயத்திரை’ பட பாடல்களை வெளியிட்டனர். விழாவில் பேசிய நடிகை குஷ்பு, “பாஜக சொல்லித்தான் ரஜினி அரசியலுக்கு வந்ததாகவும், பாஜகவுக்குப் பயந்து தான் அரசியலைவிட்டு விலகினார் என தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருகிறது. அரசியலுக்கு வருகிறேன் என்று அவரே சொன்னார். உடம்பு சரியில்லை, அரசியலுக்கு வரவில்லை என்று அவரே
 

சம்பத்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாயத்திரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், நடிகைகள் குஷ்பு மற்றும் சுஹாசினி ஆகியோர் கலந்துகொண்டு ‘மாயத்திரை’ பட பாடல்களை வெளியிட்டனர். விழாவில் பேசிய நடிகை குஷ்பு, “பாஜக சொல்லித்தான் ரஜினி அரசியலுக்கு வந்ததாகவும், பாஜகவுக்குப் பயந்து தான் அரசியலைவிட்டு விலகினார் என தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருகிறது. அரசியலுக்கு வருகிறேன் என்று அவரே சொன்னார். உடம்பு சரியில்லை, அரசியலுக்கு வரவில்லை என்று அவரே சொல்லிவிட்டார். இதில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. பாஜகவைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தனியாகவோ அல்லது பாஜகவுடன் இணைந்தோ வேலை செய்யலாம். நாங்கள் யாரை தேடி செல்லமாட்டோம்” எனக் கூறினார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். அதன் பிறகு 3 ஆண்டுகள் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் படங்களில் நடித்து வந்த ரஜினி கடந்த மாதம் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக கூறினார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுத்ததாகவும் ரஜினி அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.