×

ரஜினி vs கமல்: முதல்வர் பதவிக்கு கடும் போட்டி; வென்றது யார்? அதிர வைக்கும் சர்வே முடிவு!

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில் கமல் ஹாசனுக்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில் கமல் ஹாசனுக்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ரஜினிகாந்த், கமல் ஹாசன் அரசியல் பிரவேசம் முடிவாகிவிட்டது.கமலும் ரஜினியும் எம்.ஜி.ஆர் என்ற மக்கள் தலைவருடன் ஒப்பிடத்தகுந்தவர்கள் அல்ல. திடீர் அரசியல்வாதி அல்ல எம்.ஜி.ஆர். அவர் கட்டமைத்த கதாநாயக பிம்பமும் ஒப்பீட்டுக்குள் அடங்காதது. ஆன்மிக அரசியல் பேசும் ரஜினியின் வாக்காளர்கள்
 

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில்  கமல் ஹாசனுக்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில்  கமல் ஹாசனுக்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

ரஜினிகாந்த், கமல் ஹாசன் அரசியல் பிரவேசம் முடிவாகிவிட்டது.கமலும் ரஜினியும் எம்.ஜி.ஆர் என்ற மக்கள் தலைவருடன் ஒப்பிடத்தகுந்தவர்கள் அல்ல. திடீர் அரசியல்வாதி அல்ல எம்.ஜி.ஆர். அவர் கட்டமைத்த கதாநாயக பிம்பமும் ஒப்பீட்டுக்குள் அடங்காதது. ஆன்மிக அரசியல் பேசும் ரஜினியின் வாக்காளர்கள் யார்? ஆன்மீக வாக்குகள் எனத் தனியாக ஒன்றும் இல்லை.

கமலைப் பொறுத்தவரை அவரது அரசியல் தத்துவம் பிடிபடாததாக உள்ளது. மக்களுடன் நெருங்கி உரையாடி தன் கருத்துகளைக் கமல் புரியவைப்பாரா என்பதும் சந்தேகம். திராவிட அரசியலையும் சேர்த்துப்பேசுவதால் மட்டும் தி.மு.க ஆதரவு வாக்குகளைக் கமலால் ஈர்க்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தியுள்ள கருத்து கணிப்பில், முதல்வர் பதவிக்கு கமல் ஹாசனுக்கும், ரஜினிகாந்திற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அதில் யார் முதலமைச்சராக வர வேண்டும் என நினைக்கிறீர்கள்…?என்ற கேள்விக்கு, கமலுக்கு 5% சதவீதமும், 6% சதவீதம் மக்கள் ரஜினிக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.

முன்னதாக ஜூலை மாதம் நடந்த கணக்கெடுப்பிலும் ரஜினி 6% மக்கள் ஆதரவும், கமல் 5% சதவீத ஆதரவும் பெற்றிருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.