×

யூ கோ ஸ்டாலின் சார், வொய் வீ?

அப்பல்லோ மருத்துவமனையில் ஆப்பிளை வேகவைத்த நாளிலிருந்து ‘அதிமுக ஆட்சி இதோ இன்றைக்கு முடிந்துவிடும், நாளைக்கி காலையில உதயசூரியன் உதிக்கும்போது இலை கருகிவிடும்’ என திமுகவும் அதன் முன்னணி நிர்வாகிகளும் ‘தோ கிலோமீட்டர்’ காமெடியை மூன்று வருடங்களாக சொல்லி வருகிறார்கள். அப்பல்லோ மருத்துவமனையில் ஆப்பிளை வேகவைத்த நாளிலிருந்து ‘அதிமுக ஆட்சி இதோ இன்றைக்கு முடிந்துவிடும், நாளைக்கி காலையில உதயசூரியன் உதிக்கும்போது இலை கருகிவிடும்’ என திமுகவும் அதன் முன்னணி நிர்வாகிகளும் ‘தோ கிலோமீட்டர்’ காமெடியை மூன்று வருடங்களாக சொல்லி
 

அப்பல்லோ மருத்துவமனையில் ஆப்பிளை வேகவைத்த நாளிலிருந்து ‘அதிமுக ஆட்சி இதோ இன்றைக்கு முடிந்துவிடும், நாளைக்கி காலையில உதயசூரியன் உதிக்கும்போது இலை கருகிவிடும்’ என திமுகவும் அதன் முன்னணி நிர்வாகிகளும் ‘தோ கிலோமீட்டர்’ காமெடியை மூன்று வருடங்களாக சொல்லி வருகிறார்கள்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஆப்பிளை வேகவைத்த நாளிலிருந்து ‘அதிமுக ஆட்சி இதோ இன்றைக்கு முடிந்துவிடும், நாளைக்கி காலையில உதயசூரியன் உதிக்கும்போது இலை கருகிவிடும்’ என திமுகவும் அதன் முன்னணி நிர்வாகிகளும் ‘தோ கிலோமீட்டர்’ காமெடியை மூன்று வருடங்களாக சொல்லி வருகிறார்கள். விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும் என அவர்கள் முதன்முதலில் சொல்ல ஆரம்பித்தபோது, ஊடகங்களும் பொதுமக்களும்கூட மனதார அதனை விரும்பினார்கள்தான். ஆனால், திமுகவின் ராஜத‌ந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டது.

இப்போது அவர்களுக்கே அந்த டயலாக போரடிக்கிறதோ என்னவோ, சம்பந்தமே இல்லாமல் ஊடகங்களை குதற ஆரம்பித்திருக்கிறார்கள். தொலைகாட்சி விவாதங்களில் பங்கேற்கமாட்டோம் என கொஞ்சநாள் பிரேக் எடுத்தவர்கள், இப்போது ஸ்டாலினின் சட்டமன்ற உரையை ஊடகங்கள் அவர்கள் விரும்பிய அளவிற்கு ஊடகங்கள் கவரேஜ் தரவில்லை என முரசொலி தலையங்கம்மூலம் விசனபட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜூலை 20-ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்க போர் பிரகடனத்தை போல் அமைந்திருந்தது, ஆனால் வழக்கம்போல் தமிழ் ஊடகங்கள் இந்த உரையின் அருமையை புரிந்து கொள்ளவில்லை, ஸ்டாலின் உரையின் அருமை புரியவில்லையா அல்லது அடிமைத்தனத்தில் உச்சமாக அதிகார வர்க்கத்தின் மிரட்டல்கள் கண்ணை மறைத்து விட்டதா என தெரியவில்லை என்றும் அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலில் அபரித வெற்றிபெற்று காட்சி மாறினாலும் ஆட்சி மாறவில்லையே என்ற திமுக தலைமையின் விரக்தி புரிகிறது, அதற்காக ஊடகங்களும் அதேயளவுக்கு விரக்தியடைந்து செயல்படவேண்டும் என நினைப்பது எப்படி நியாயம்? யூ கோ சார், வொய் வீ?