×

மோடியை போட்டுக் கொடுக்க வெளிநாட்டுக்கு செல்லும் அதிமுக அமைச்சர்கள்… தமிழ்நாடு தாங்காதய்யா..!

அதிமுகவை காப்பாற்ற அந்நாட்டு அதிபர்கள், பிரதமர்களிடம் அமித் ஷாவுக்கு தெரியாமல் கோரிக்கை வைத்து வருகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஓ.பி.எஸ் வகையறாக்கள் வெளிநாடு செல்லாததை கவனத்தில் கொள்க மக்களே. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அரசு முறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறார். லண்டனில் கோட்டு சூட்டு போட்டு பட்டையை கிளப்பும் எடப்பாடி பழனிசாமி அடுத்து அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த
 

அதிமுகவை காப்பாற்ற அந்நாட்டு அதிபர்கள், பிரதமர்களிடம் அமித் ஷாவுக்கு தெரியாமல் கோரிக்கை வைத்து வருகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஓ.பி.எஸ் வகையறாக்கள் வெளிநாடு செல்லாததை கவனத்தில் கொள்க மக்களே.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அரசு முறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறார். லண்டனில் கோட்டு சூட்டு போட்டு பட்டையை கிளப்பும் எடப்பாடி பழனிசாமி  அடுத்து அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றுள்ளார் இவர்கள் தவிர மேலும் சில அமைச்சர்களும் வெளிநாடு செல்ல உள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கிலாந்து பயணம்
பால்வளம், தொழில்துறை ராஜேந்திர பாலாஜி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமெரிக்கா பயணம்.  பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து பயணம். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியா பயணம்.

கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலியா பயணம். இவர்களுடன் அத்துறை அதிகாரிகளும் செல்கின்றனர். வெளிநாடுகளில் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் மேலும் அந்நாடுகளின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தவும் தமிழக அமைச்சர்களும், அத்துறையின் அதிகாரிகளும் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளனர் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் விவகாரம், உள்கட்சி விவகாரம் என பல விஷயங்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது அதிமுக அமைச்சரவை. இந்நிலையில் ஆட்சி முடிவடையும் நிலையில் அமைச்சர்கள் நாடு நாடாக சுற்றுவதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஒருவேளை மோடி தம்மை அடிமையாக வைத்திருப்பதால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று அதிமுகவை காப்பாற்ற அந்நாட்டு அதிபர்கள், பிரதமர்களிடம் அமித் ஷாவுக்கு தெரியாமல் கோரிக்கை வைத்து வருகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஓ.பி.எஸ் வகையறாக்கள் வெளிநாடு செல்லாததை கவனத்தில் கொள்க மக்களே..!