×

மோடியின் மாணவர்கள் உடனான 16ம் தேதி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு… 20ம் தேதிக்கு மாற்றிய அமைச்சகம்!

வருகிற 16ம் தேதி நடைபெற இருந்த மோடியின் மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வது பற்றிய ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை தமிழக மாணவர்கள் காண பள்ளிகள் அனைத்தும் ஏற்பாடு செய்ய வேண்டும். 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள்
 
வருகிற 16ம் தேதி நடைபெற இருந்த மோடியின் மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வது பற்றிய ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை தமிழக மாணவர்கள் காண பள்ளிகள் அனைத்தும் ஏற்பாடு செய்ய வேண்டும். 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கட்டாயம் இந்த நிகழ்ச்சியைக் காண வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
பொங்கல் திருவிழா விடுமுறையில் இருப்பவர்கள் எப்படி உடனடியாக திரும்ப முடியும்…

மேலும் பொங்கல் திருவிழா அன்று இப்படி கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

உடனடியாக இது கட்டாயம் இல்லை, வீட்டில் டி.வி இல்லாத மாணவர்களுக்கு வசதியாக பள்ளியில் ஏற்பாடு செய்யப்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் வந்தால் போதும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல, பல மாநிலங்களில மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால், அந்த அந்த மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை 20ம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.
இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 16ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக 16ம் தேதி இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே, கலந்துரையாடல் 20ம் தேதி திங்கட்கிழமை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் மோடி இந்தியில் பேசப் போகிறார்… இங்குள்ள மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்குக் கூட இந்தி புரியப்போவது இல்லை. ஒன்றும் புரியாத இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று உத்தரவிடுவது என்ன டிசைனோ என்று கல்வியாளர்கள், எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.