×

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அனுமதி…

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும், இடதுசாரி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான புத்ததேப் பட்டாச்சார்யா நேற்று உடல் நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள வுட்லேண்ட்ஸ் மல்டிஸ்பெஷால்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்
 

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும், இடதுசாரி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான புத்ததேப் பட்டாச்சார்யா நேற்று உடல் நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள வுட்லேண்ட்ஸ் மல்டிஸ்பெஷால்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2011 வரை 34 ஆண்டுகள் இடதுசாரிகளின் ஆட்சி நடைபெற்றது. இதில் 2000 முதல் 2011 வரை புத்ததேப் பட்டாச்சார்யா அம்மாநில முதல்வராக பதவி வகித்தார். தற்போது 75 வயதாகும் புத்ததேப் பட்டாச்சார்யா சமீபகாலமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.

புத்ததேப் பட்டாச்சார்யாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு சென்றதாக தகவல். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சீதாராம் யெச்சூரி இன்று காலை மருத்துவமனைக்கு சென்று புத்ததேப் பட்டாச்சார்யாவை பார்க்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.