×

மூன்றாம் ஆண்டு நினைவு தினம் : ட்விட்டரில் ட்ரெண்ட் அடிக்கும் ஜெயலலிதா ஹேஸ்டேக் !

இன்று அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நல குறைபாடு காரணமாகக் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். அவரின் ஆட்சியை இன்னும் பலராலும் மறக்க இயலா. ஒரு பெண்ணாகக் கம்பீர நடை போட்டவர் ஜெயலலிதா. இன்று அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும்
 

இன்று அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நல குறைபாடு காரணமாகக் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். அவரின் ஆட்சியை இன்னும் பலராலும் மறக்க இயலா. ஒரு பெண்ணாகக் கம்பீர நடை போட்டவர் ஜெயலலிதா.

இன்று அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. அதில் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றனர். 

ஒரு புறம் மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த மறுபுறம் இணைய தளத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ட்விட்டரில் #jayalalitha #amma #thalaivi #ammaforever உள்ளிட்ட ஹேஸ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அதில், பல பேர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஷேர் செய்து, ‘சிங்கேபெண், தைரியமான பெண், அயர்ன் லேடி ஜெயலலிதா,”  என்று பதிவிட்டு வருகின்றனர்.