×

முற்றுகையிட்ட விவசாயிகள்… காருக்குள் முடங்கிய ரோஜா!

ஆந்திராவின் தலைநகராக அமராவதி உருவாக்கப்பட்டு வந்தது. ஜெகன் மோகன் அரசோ, ஆந்திராவுக்கு மூன்று தலைநகர் என்று புதிய திட்டத்தை கொண்டுவந்தது. இதனால், தலைநகரத்துக்கு என்று நிலத்தைக் கொடுத்த விவாசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். ஆந்திராவில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் நகரி எம்.எல்.ஏ-வும் தொழில் வளர்ச்சிக் கழகத் தலைவருமான ரோஜா ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காரில் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவின் தலைநகராக அமராவதி உருவாக்கப்பட்டு வந்தது. ஜெகன் மோகன் அரசோ, ஆந்திராவுக்கு மூன்று
 

ஆந்திராவின் தலைநகராக அமராவதி உருவாக்கப்பட்டு வந்தது. ஜெகன் மோகன் அரசோ, ஆந்திராவுக்கு மூன்று தலைநகர் என்று புதிய திட்டத்தை கொண்டுவந்தது. இதனால், தலைநகரத்துக்கு என்று நிலத்தைக் கொடுத்த விவாசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஆந்திராவில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் நகரி எம்.எல்.ஏ-வும் தொழில் வளர்ச்சிக் கழகத் தலைவருமான ரோஜா ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காரில் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவின் தலைநகராக அமராவதி உருவாக்கப்பட்டு வந்தது. ஜெகன் மோகன் அரசோ, ஆந்திராவுக்கு மூன்று தலைநகர் என்று புதிய திட்டத்தை கொண்டுவந்தது. இதனால், தலைநகரத்துக்கு என்று நிலத்தைக் கொடுத்த விவாசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். அமராவதியே ஆந்திராவின் தலைநகராக நீடிக்க வேண்டும் என்று தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து விவசாயிகளும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், அமராவதியில் நீருகொண்டா பகுதியில் உள்ள தனியார் பல்கலைக் கழக விழா ஒன்றில் பங்கேற்க நடிகையும் ஆந்திர மாநில தொழில் வளர்ச்சிக் கழகத் தலைவருமான ரோஜா வந்தார். ரோஜாவின் வருகையை அறிந்த விவசாயிகள் அவரது காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் ரோஜா ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காரிலேயே அமர்ந்திருந்தார். பிறகு போலீசார் சமரசம் செய்து ரோஜாவை அனுப்பிவைத்தனர்.
இது குறித்து ரோஜா கூறுகையில், “சந்திரபாபு நாயுடுதான் சமூக விரோதிகளை ஏவியுள்ளார். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதால்தான் மூன்று தலைநகர் திட்டத்தை ஜெகன் மோகன் அறிவித்தார். அமராவதி பகுதியில் ஜெகன் மோகன் 4000 ஏக்கர் நிலத்தை பினாமி பெயரில் வாங்கிக் குவித்துள்ளார். தலைநகரை மாற்றப் போகிறார்கள் என்று தெரிந்ததும் சந்திரபாபு பதற்றமடைந்துள்ளார்” என்றார்