×

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கடனை அடைத்த மகள்! நெகிழ்ச்சியான சம்பவம்!

பாஜக மீது எத்தனை தான் மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், பாஜகவின் சில தலைவர்களை, தங்கள் வீட்டு உறுப்பினரைப் போலவே பாவித்து வந்தார்கள் மக்கள். இந்தியர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், நமக்காக போராட ஒரு அமைச்சர் இருக்கிறார் எனும் அளவிற்கு ட்விட்டர் பக்கத்தில், பொதுமக்களின் கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் செவி சாய்த்து கூடுமானவரையில் தனது கவனத்திற்கு வரும் அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து, பேர் வாங்கியிருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். பாஜக மீது எத்தனை தான் மக்களுக்கு
 
பாஜக மீது எத்தனை தான் மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், பாஜகவின் சில தலைவர்களை, தங்கள் வீட்டு உறுப்பினரைப் போலவே பாவித்து வந்தார்கள் மக்கள். இந்தியர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், நமக்காக போராட ஒரு அமைச்சர் இருக்கிறார் எனும் அளவிற்கு ட்விட்டர் பக்கத்தில், பொதுமக்களின் கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் செவி சாய்த்து கூடுமானவரையில் தனது கவனத்திற்கு வரும் அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து, பேர் வாங்கியிருந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார் சுஷ்மா சுவராஜ். அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய ஹரிஷ் சால்வேயிடம் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது, நான் உங்களுக்கு தரவேண்டிய வழக்கு கட்டணமான ஒரு ரூபாயைத் தரவேண்டும் என்று நினைவுபடுத்தியிருக்கிறார்.  நான் கட்டாயம் வந்து எனது கட்டணத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று வழக்கறிஞர் ஹரிஷ் பதில் சொல்லியிருக்கிறார். அடுத்த நாள் காலை 6 மணிக்கு வந்து ஒரு ரூபாயை வாங்கிக் கொள்ளுமாறு சுஷ்மா கூறியிருந்த நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவே சுஷ்மா சுவராஜ் உயிரிழந்தார். இதனால் ஹரிஸ் சால்வேவிற்கு அவர் ஒரு ரூபாய் நாணயத்தை வழங்க முடியாமல் போனது. 

இந்த உரையாடலைப் பற்றி அறிந்து கொண்டு சுஷ்மாவின் மகள் பன்சூரி,  நேற்று வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேவை அழைத்து, அவருக்கு தன் தாயார் தரவேண்டிய வழக்கு கட்டணமான ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்தார்.  இதனை சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.முன்னதாக இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராக சால்வேயை அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நியமித்தார். சுஷ்மாவின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு ரூபாய் கட்டணத்திற்கு இந்த வழக்கில் வாதட ஹரிஸ் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது