×

முந்திரிக்கொட்டை உதயநிதி… அப்பா முதல் மந்திரி ஆவற்குள் இவ்வளவு அவசரமா..?

உதயநிதிக்கு, தனியாக அரசியல் ஆலோசனை குழு அமைக்கும் முயற்சியில் முட்டுக்கட்டை விழுந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்பாவை போலவே உதயநிதியும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பு எழுதி வைத்து பேசி வருகிறார். ஒரு கூட்டத்தில், திராவிட இயக்கம், நீதி கட்சி பற்றி பேசுகையில், தவறாக சில கருத்துகளை, உதயநிதி தெரிவித்தது சர்ச்சைக்கு உள்ளானது. சமூக வலைதளங்களில், ‘மீம்ஸ்’கள் வைரலானது. இது கட்சியில் உள்ள சீனியர்களை முகம் சுளிக்க வைத்தது. அதனால், சர்ச்சையை தவிர்க்கும்
 

உதயநிதிக்கு, தனியாக அரசியல் ஆலோசனை குழு அமைக்கும் முயற்சியில் முட்டுக்கட்டை விழுந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்பாவை போலவே உதயநிதியும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சியில்  ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பு எழுதி வைத்து பேசி வருகிறார். ஒரு கூட்டத்தில், திராவிட இயக்கம், நீதி கட்சி பற்றி பேசுகையில், தவறாக சில கருத்துகளை, உதயநிதி தெரிவித்தது சர்ச்சைக்கு உள்ளானது. சமூக வலைதளங்களில், ‘மீம்ஸ்’கள் வைரலானது. இது கட்சியில் உள்ள சீனியர்களை முகம் சுளிக்க வைத்தது.

அதனால், சர்ச்சையை தவிர்க்கும் வகையில், உதயநிதிக்காக தனி அரசியல் ஆலோசனை குழு உருவாக்க வேண்டும் என ஸ்டாலின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இது ஸ்டாலினுக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கி வரும் ஓ.எம்.ஜி., குழுவினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது. ஸ்டாலினே இன்னும் முதல்வராகவில்லை. அவர் முதல்வராகிய பின், உதயநிதியை முன்னிலைப்படுத்தினால், எந்த பிரச்னையும், குழப்பமும் வராது.

ஆனால், ஸ்டாலின் முதல்வராகுவதற்கு முன் உதயநிதியை தனி அடையாளப்படுத்துவது ஆளுங்கட்சிக்கும், நடிகர் ரஜினிக்கும் சாதகமாக மாறி விடும் என  எதிர்ப்புக் குரல் எழுப்பினர். ஆகவே உதயநிதிக்கு, தனியாக அரசியல் ஆலோசனை குழு அமைக்கும் முயற்சியில் முட்டுக்கட்டை விழுந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.