×

மு.க.ஸ்டாலினிடம் பறித்துக் கொண்டதை விஜயிடம் தட்டிப்பறித்த உதயநிதி..!

அப்பாவிடம் இருந்து பறித்துக் கொண்ட பட்டத்தை விஜயிடம் இருந்து தட்டிப்பறித்து உதயநிதியிடம் கொடுத்துள்ளனர். சமீப காலமாக திமுகவில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த தலைவராக உதயநிதி ஸ்டாலினை உருவாக்க வேண்டும் என்பதற்கான பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கமாகத்தான் உதயநிதி ஸ்டாலினை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்கினார்கள். பின்னர் தேர்தல் வெற்றிக்கு உதயநிதி தான் காரணம் என்பதுபோல அவருக்கு பதவி கொடுக்க காய்நகர்த்தல்கள் நடந்தன.
 

அப்பாவிடம் இருந்து பறித்துக் கொண்ட பட்டத்தை விஜயிடம் இருந்து தட்டிப்பறித்து உதயநிதியிடம் கொடுத்துள்ளனர்.

சமீப காலமாக திமுகவில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த தலைவராக உதயநிதி ஸ்டாலினை உருவாக்க வேண்டும் என்பதற்கான பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது.

இதன் தொடக்கமாகத்தான் உதயநிதி ஸ்டாலினை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்கினார்கள். பின்னர் தேர்தல் வெற்றிக்கு உதயநிதி தான் காரணம் என்பதுபோல அவருக்கு பதவி கொடுக்க காய்நகர்த்தல்கள் நடந்தன. இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஸ்டாலின் தொடக்கத்தில் வகித்த திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திமுகவிலேயே சில சலசலப்புகள் எழுந்தன. ஆனால் அந்த சலசலப்புகள் பெரிதாகமால் அப்படியே அடங்கிப்போகின. இந்நிலையில் தற்போது திமுக தலைமை புதிதாக ஒரு காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளது. இதுவரை மு.க.ஸ்டாலினை திமுகவினர் தளபதி என்றுதான் அழைத்து வந்தார்கள். ஆனால் இனிமேல் அவரை தலைவர் என்றுதான் அழைக்க வேண்டுமாம்.  உதயநிதியை தளபதி உதயநிதி என்று அழைக்க வேண்டும் என திமுகவினருக்கு தலைமை வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக திமுக இணையதள நண்பர்கள் முகநூல் பகுதியில், கழக உடன்பிறப்புக்கள் வரவேற்பு விளம்பரங்களில் தலைவரை இனி, தளபதி என்று அழைக்க வேண்டாம். தம்பி உதயநிதியே தளபதி என்று பதிவிட்டுள்ளார்கள். தளபதி மு.க.ஸ்டாலின் என அழைக்கப்பட்டு வந்தார். இளைய தளபதி பட்டத்தை கடாசி விட்டு சர்கார் படத்தில் தளபதி பட்டத்தை சூட்டிக் கொண்டார் விஜய். இதற்கு திமுகவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 

இந்நிலையில் அப்பாவிடம் இருந்து பறித்துக் கொண்ட பட்டத்தை விஜயிடம் இருந்து தட்டிப்பறித்து உதயநிதியிடம் கொடுத்துள்ளனர்.