×

மின் உற்பத்தியை குறைத்த தமிழக அரசு… மின் வெட்டு ஏற்படும் அபாயம்?

தமிழகத்தில் மின் உற்பத்தியை தமிழக அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். இதனால், மின் வெட்டு ஏற்படக்கூடிய நிலை உள்ளது என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளன. தமிழகத்தில் மின் உற்பத்தியை தமிழக அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். இதனால், மின் வெட்டு ஏற்படக்கூடிய நிலை உள்ளது என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளன. ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் எல்லா தொழில்களும் முடங்கியுள்ளன. தொழிற்சாலைகள் முதல் ஐ.டி அலுவலகங்கள் வரை எல்லாமே மூடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மின்சாரத்தின் தேவையும் பெருமளவு குறைந்துவிட்டது.
 

தமிழகத்தில் மின் உற்பத்தியை தமிழக அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். இதனால், மின் வெட்டு ஏற்படக்கூடிய நிலை உள்ளது என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளன.

தமிழகத்தில் மின் உற்பத்தியை தமிழக அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். இதனால், மின் வெட்டு ஏற்படக்கூடிய நிலை உள்ளது என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளன.
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் எல்லா தொழில்களும் முடங்கியுள்ளன. தொழிற்சாலைகள் முதல் ஐ.டி அலுவலகங்கள் வரை எல்லாமே மூடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மின்சாரத்தின் தேவையும் பெருமளவு குறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு 6000 மெகாவாட் மின்சார உற்பத்தியை குறைத்துள்ளது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மக்கள் நலன் முக்கியம் என்பதால் ஏப்ரல் 30ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றார். 
தமிழக அரசு தொழிற்சாலைகள் இயங்காததை மட்டும் கருத்தில் கொண்டு மின் உற்பத்தியை குறைத்துள்ளது. கோடைக் காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும். அதற்கு ஏற்ற வகையில் மின் உற்பத்தி குறைப்பு செய்யப்படவில்லை. இதனால், மின் பற்றாக்குறை ஏற்படலாம் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.