×

மாணவர்களை போராட்டத்துக்கு அழைத்துச் சென்ற நாம் தமிழர் நிர்வாகி… கடத்தப்பட்டதாக கதறிய பெற்றோர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை போராட்டத்துக்கு அழைத்துச் சென்ற நாம் தமிழர் நிர்வாகியின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை போராட்டத்துக்கு அழைத்துச் சென்ற நாம் தமிழர் நிர்வாகியின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்துவந்த மாணவர்கள் ஆறு பேர் பள்ளிக்கு வரவில்லை என்று அவர்கள் பெற்றோருக்கு தகவல் சென்றது. பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற ஆறு பேரும், பள்ளிக்கு வரவில்லை என்ற தகவல்
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை போராட்டத்துக்கு அழைத்துச் சென்ற நாம் தமிழர் நிர்வாகியின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை போராட்டத்துக்கு அழைத்துச் சென்ற நாம் தமிழர் நிர்வாகியின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்துவந்த மாணவர்கள் ஆறு பேர் பள்ளிக்கு வரவில்லை என்று அவர்கள் பெற்றோருக்கு தகவல் சென்றது. பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற ஆறு பேரும், பள்ளிக்கு வரவில்லை என்ற தகவல் அறிந்து அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். உடன் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் மாயம் என்று மாவட்டம் முழுவதும் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் சென்றது.

இந்த நிலையில் கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள் ஆறு பேரும் இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனே அங்கு விரைந்து வந்த பெற்றோர் மற்றும் போலீசார் குழந்தைகளை கண்டனர். அவர்கள் ஆறு மாணவர்களின் இருவரது உறவினரான ராகுல் என்பவரோடு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். 
தங்கள் குழந்தையை உறவினர் ராகுல் சொல்லாமல் அழைத்துச் சென்றது அறிந்த பெற்றோர் போலீசில் புகார் ஏதும் அளிக்கவில்லை. இனி இதுபோன்று செயல்படக் கூடாது என்று ராகுலை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.