×

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் : அமமுக சார்பில் மௌன ஊர்வலம்..

வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமமுக சார்பில் மௌன ஊர்வலம் நடத்தவுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமமுக சார்பில் மௌன ஊர்வலம் நடத்தவுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மை மீளாத்துயரில்
 

வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமமுக சார்பில் மௌன ஊர்வலம் நடத்தவுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது

வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமமுக சார்பில் மௌன ஊர்வலம் நடத்தவுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்த மூன்றாம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.

அன்றைய தினம் காலை 10:30 மணிக்குச் சென்னை அண்ணாசாலை பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தலைமையில் மவுன ஊர்வலமாகப் புறப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் துயில்கொள்ளும் மெரினா கடற்கரை நினைவிடத்தில் ஒன்றுகூடி இதய அஞ்சலி செலுத்தி, அம்மா காலத்துப் பெருமைகள் அனைத்தையும் மீட்டெடுத்திடச் சபதம் ஏற்போம்.

இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நிர்வாகிகள், பகுதி ஒன்றிய, நகர, பேரூர், வட்ட ஊராட்சி கிளைக் கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.