×

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம்: ஊர்வலத்தில் பங்கேற்க அழைப்பு..

வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் நடக்கவிருக்கும் ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொள்ளும் படி அதிமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் நடக்கவிருக்கும் ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொள்ளும் படி அதிமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ் மக்கள் அனைவரது இதயங்களிலும்
 

வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் நடக்கவிருக்கும் ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொள்ளும் படி அதிமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் நடக்கவிருக்கும் ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொள்ளும் படி அதிமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ் மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நிரந்தரப் பொதுச்செயலாளர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016. 

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான 5.12.2016 அன்று  
வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சாலையில் இருந்து கழக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாகப் புறப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

 

அதனைத் தொடர்ந்து நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகளும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பெருமக்களும், மாவட்ட கழக செயலாளர் அவர்களும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.