×

பெண்களுக்கு மத்தியில் ஜீரோவான கமல்… பி.கே. தந்த பகீர் ரிப்போர்ட்டால் பீதியில் கமல்..!

பெண்கள் மத்தியில் தனது செல்வாக்கு ஜீரோ என்பதை கமலால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். ஆனால் அதை ஏற்றுக் கொண்டு, எப்படி சரி செய்வது? எனும் பணியில் இறங்கிவிட்டாராம். ’நம் மாநிலத்தை கெடுத்தது இந்த இரு திராவிட கட்சிகளும்தான். இதற்கு மருந்தாய் மாற்று அரசியல் தருவோம் நாங்கள்.’ என்று வாய் கிழியப் பேசிவிட்டு, அதே திராவிட கட்சிகளின் பாதையில்தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். பொதுக்கூட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டதை விட சுமார் மூன்று மணி நேரம் லேட்டாக வந்து கெத்து காட்டுவதில்
 

பெண்கள் மத்தியில் தனது செல்வாக்கு ஜீரோ என்பதை கமலால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். ஆனால் அதை ஏற்றுக் கொண்டு, எப்படி சரி செய்வது? எனும் பணியில் இறங்கிவிட்டாராம்.

’நம் மாநிலத்தை கெடுத்தது இந்த இரு திராவிட கட்சிகளும்தான். இதற்கு மருந்தாய் மாற்று அரசியல் தருவோம் நாங்கள்.’ என்று வாய் கிழியப் பேசிவிட்டு, அதே திராவிட கட்சிகளின் பாதையில்தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். பொதுக்கூட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டதை விட சுமார் மூன்று மணி நேரம் லேட்டாக வந்து கெத்து காட்டுவதில் துவங்கி, நிர்வாகிகள் நீக்கம் வரை எல்லாமே ஜெ., கருணாநிதி ஸ்டைலில்தான் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான்கு சதவீத வாக்குகளை வாங்கி நிமிர்ந்து நிற்கிறது நம்மவரின் கட்சி. எதிர்வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெரும் வெற்றியை பெற்று, தனிப்பெரும் அரசியல் இயக்கமாக மாறுவதற்கான முழு முயற்சிகளிலும் இறங்கிவிட்டார் கமல்ஹாசன். அதன் ஒரு நிலையாகத்தான் ’ஐபேக்’ எனப்படும் பிரசாந்த் கிஷோரின் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கைகளில் தன் கட்சியை கொடுத்திருக்கிறார். ’இந்தியன் பொலிடிகல் ஆக்‌ஷன் கமிட்டி’ என்பதன் சுருக்கம்தான் இந்த ஐபேக். மோடி, நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி என்று முக்கிய மனிதர்களின் அரசியல் வெற்றிக்கு இந்த கார்ப்பரேட் நிறுவனம்தான் காரணம்.

இப்போது தமிழக அரசியலில் வெற்றி பெற இவரிடம்தான் தன் கட்சியை அடமானம் வைத்துள்ளார் கமல் என்று விமர்சகர்கள் போட்டுத் தாக்குகிறார்கள். கமலுடனான பிஸ்னஸ் டீலை ஓ.கே. செய்துவிட்ட ஐபேக் நிறுவனம், கமலுக்கு தமிழகத்தில் இருக்கும் செல்வாக்கை அறியும் வேலையை முதற்கட்டமாக செய்துமுடித்துவிட்டது. அதன் ரிசல்டை சமீபத்தில் ம.நீ.ம. நிர்வாகிகள் அடங்கிய கூட்டத்தில் வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் கிராம அளவில் ம.நீ.ம. சென்று சேரவேயில்லையாம். எனவே கிராமங்களில் தன் கட்சியை வளர்ப்பதற்கான காரியங்களை கமல் உடனே செய்தாகவேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளனர்.

அதேபோல் பெண்கள் மத்தியில் கமல் எனும் நபரை நடிகராக மட்டுமே அறிந்து வைத்துள்ளனரே தவிர அரசியல் தலைவராக பெரிதாக அறிமுகமாகவில்லையாம். அவர் கட்சிக்கு ஓட்டுப் போடுவதை பெண்கள் விரும்பவேயில்லை என்று ஆய்வு முடிவு சொல்கிறது. கூடவே, அரசியலைப் பொறுத்தவரையில் கமலின் செல்வாக்கு, மரியாதையானது பெண்கள் மத்தியில் வெறும் ஜீரோதான் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லியுள்ளனர். ஜீரோ அல்லது மைனஸ் என்ற அளவில்தான் இருக்கிறது என்று கூறியவர்கள், இந்த நிலையை மாற்றினால் மட்டுமே கமலுக்கு அரசியல் வெற்றி கிட்டும் என்று சொல்லியுள்ளார்கள்.

பெண்கள் மத்தியில் தனது செல்வாக்கு ஜீரோ என்பதை கமலால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். ஆனால் அதை ஏற்றுக் கொண்டு, எப்படி சரி செய்வது? எனும் பணியில் இறங்கிவிட்டாராம்.