×

புத்தகத்தில் மட்டும்தான் சாதிகள் இல்லையடி பாப்பா….. சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த பீகார் சட்டப்பேரவையில் தீர்மானம்….

பீகார் சட்டப்பேரவையில் சாதி அடிப்படையில் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை சாடி அடிப்படையில் எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. கடந்த ஜனவரியில் பீகார் முதல்வர் நிதிஷ்
 

பீகார் சட்டப்பேரவையில் சாதி அடிப்படையில் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று  அம்மாநில சட்டப்பேரவையில் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை சாடி அடிப்படையில் எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

கடந்த ஜனவரியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆதரவு தெரிவித்து இருந்தார். மேலும், 1930க்கு முன்பு ஜாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், அது போல் மீண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். 

பீகார் சட்டப்பேரவை சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றி இருப்பது, சாதி ஒழிப்பு எல்லாம் பாட புத்தகத்தோடு சரி, நடைமுறைக்கு ஒத்து வராது என்பதை வெளிப்படுத்துகிறதோ அல்லது மக்கள் சாதி மற்றும் மதம் அடிப்படையில் பிரிந்து இருக்க வேண்டும் என அரசியல்வாதிகள் விரும்புகிறார்களா?