×

புகழேந்தி எடுத்த பகீர் முடிவு… டி.டி.வி.தினகரனால் நடுத்தெருவுக்கு வரப்போகும் சசிகலா குடும்பம்..!

தி.மு.க.,வில் சேர்க்க தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி போன்றவர்கள் முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், புகழேந்திக்கு கர்நாடகாவில் தீவிர அரசியல் செய்யவே விரும்புகிறார். வீடியோவில் டி.டி.வி. தினகரனை விமர்சித்ததால் அமமுகவில் செய்தி தொடர்பாளர் புக்ழேந்தி பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சசிகலாவின் நம்பிக்கையை பெற்றவரும் , கர்நாடாகவில் சசிகலாவின் சொத்துக்களை நிர்வகித்து வருபவருமான புகழேந்தி டி.டி.வி.தினகரன் மீது வெகு நாட்களாகவே அதிருப்தி மனப்பான்மையில் இருந்து வருகிறார். சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்கும் புகழேந்தி தன்னை பற்றி போட்டுக்கொடுப்பதாக
 

தி.மு.க.,வில் சேர்க்க தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி போன்றவர்கள் முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், புகழேந்திக்கு கர்நாடகாவில் தீவிர அரசியல் செய்யவே விரும்புகிறார்.

வீடியோவில் டி.டி.வி. தினகரனை விமர்சித்ததால்  அமமுகவில் செய்தி தொடர்பாளர் புக்ழேந்தி  பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

சசிகலாவின் நம்பிக்கையை பெற்றவரும் , கர்நாடாகவில் சசிகலாவின் சொத்துக்களை நிர்வகித்து வருபவருமான புகழேந்தி டி.டி.வி.தினகரன் மீது வெகு நாட்களாகவே அதிருப்தி மனப்பான்மையில் இருந்து வருகிறார். சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்கும் புகழேந்தி தன்னை பற்றி போட்டுக்கொடுப்பதாக தினகரனுக்கு  எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. 

சமீபத்தில், அ.ம.மு.க.,  நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், கொள்கை பரப்பு செயலர் பதவி, தனக்கு கிடைக்கும் என, புகழேந்தி எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு மீண்டும் செய்தி தொடர்பாளர் பதவி தான் கிடைத்தது. இதனால், அதிருப்தி அடைந்தார்.

இதனை தொடர்ந்து கோவையில் நிர்வாகிகளை சந்தித்த அவர் டி.டி.வி.தினகரனை விமர்சித்தது வீடியோவாக வெளி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பேன் என தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரை தி.மு.க.,வில் சேர்க்க தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி போன்றவர்கள் முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், புகழேந்திக்கு கர்நாடகாவில் தீவிர அரசியல் செய்யவே விரும்புகிறார். தமிழக அரசியலில் அவருக்கு உள்ள ஆதரவு ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தெரிந்து விட்டது. அங்கு போட்டியிட்ட அவர், மிக குறைந்த ஓட்டுக்களை பெற்று படுதோல்வி அடைந்தார்.

எனவே, கர்நாடகா அரசியலில் ஈடுபடும் விதமாக அங்கு ஆட்சி செய்யும் பா.ஜ.,வில் இணைய விரும்புவதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, பா.ஜ., – எம்.பி., ஒருவருடன் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க, புகழேந்தி விரும்புகிறார். அவரை சந்தித்து, தினகரன் செயல்பாடுகள் பற்றி புகார் கூற திட்டமிட்டு உள்ளார். அதன்பின், தன் முடிவை அறிவிப்பார் என, தெரிகிறது.

ஆனால் சசிகலா குடும்பத்து ரகசியங்கள், சொத்து விபரங்கள் என அனைத்தையும் அறிந்தவர் புகழேந்தி என்பதால் அவர் பாஜகவுக்கு போனால் அனைத்து ரகசியங்களும் வெளியாகி விடும் என அதிர்ச்சியாகிக் கிடக்கிறது டி.டி.வி.தினகரன் வட்டாரம்.  இதை மனதில் வைத்தே ’என்னை  அமமுகவில் இருந்து நீக்கினால் கட்சியே மொத்தமாக அழிந்து  விடும்’’ என அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறார் புகழேந்தி.