×

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிலை தடுமாறி விழுந்த விஜயகாந்த்: தொண்டர்கள் அதிர்ச்சி!

சென்னை:  தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது கட்சி அலுவலகத்துக்கு வந்த போது  நிலைதடுமாறி கீழே விழுந்தார்.  மக்களவை தேர்தலுக்குப் பிறகு சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்லவிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இடையில் சிறு உடல் பிரச்னை காரணமாக இங்கேயே சிகிச்சை எடுத்து வருகிறார். அந்த சிகிச்சை முடிந்தவுடன் அமெரிக்கா சென்று சென்று சிகிச்சை எடுக்க இருக்கிறார்.  இந்நிலையில் விஜயகாந்த் நாளை தனது 68வது  பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தேமுதிகவினர் இந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி
 

சென்னை:  தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது கட்சி அலுவலகத்துக்கு வந்த போது  நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

மக்களவை தேர்தலுக்குப் பிறகு சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்லவிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இடையில் சிறு உடல் பிரச்னை காரணமாக இங்கேயே சிகிச்சை எடுத்து வருகிறார். அந்த சிகிச்சை முடிந்தவுடன் அமெரிக்கா சென்று சென்று சிகிச்சை எடுக்க இருக்கிறார். 

இந்நிலையில் விஜயகாந்த் நாளை தனது 68வது  பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தேமுதிகவினர் இந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர்.  இதனை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தே.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் அமைப்புரீதியான 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார மையங்களுக்கு சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான  1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்  வழங்கப்பட்டன.  மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு  நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள் விஜயகாந்த்திற்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

 

வறுமை ஒழிப்புதினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் MGR காதுகேளாதோர் பள்ளிக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 50000 இவ்வாண்டும் வழங்கப்பட்டது. அப்போது குழந்தைகளுக்கு இனிப்புகள் ஊட்டிய போது எடுத்த படம். #வருமை_ஒழிப்பு_தினம் pic.twitter.com/ln7UYJnYgF
— Vijayakant (@iVijayakant) August 24, 2019

முன்னதாக  தேமுதிக அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தொண்டர்களுக்கு அப்போது   விஜயகாந்த் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து உடனிருந்தவர்கள் அவரை தூக்கினர். இதனால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது.