×

பிகில் ரிலீஸ்… விரக்தியில் திரையை கிழித்து எரிந்து வெறித்தனம் நடத்திய விஜய் ரசிகர்களால் பரபரப்பு..!

திரையரங்கினுள் புகுந்து ஸ்க்ரீனையும் சேதப்படுத்திய அவர்கள் கேட்டை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். திரையரங்கு ஊழியர்களும் தாக்கபட்டுள்ளனர். பிகில் ரிலீஸாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தாலும் எல்லை மீறி தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் வெறியாட்டம் நடத்தி 37 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கையிலும் கோரத்தாண்டவத்தை நிகழ்த்தியுள்ளனர் புள்ளீங்கோ. இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி இன்று ஒரு
 

திரையரங்கினுள் புகுந்து ஸ்க்ரீனையும் சேதப்படுத்திய அவர்கள் கேட்டை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். திரையரங்கு ஊழியர்களும் தாக்கபட்டுள்ளனர்.

பிகில் ரிலீஸாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தாலும் எல்லை மீறி தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் வெறியாட்டம் நடத்தி 37 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கையிலும் கோரத்தாண்டவத்தை நிகழ்த்தியுள்ளனர் புள்ளீங்கோ. 

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளியையொட்டி இன்று ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அரசிடம் அனுமதி கேட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி முதல் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இலங்கையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தியேட்டரையே விஜய் ரசிகர்கள் சூறையாடியுள்ளனர். 

இலங்கை ஜாஃப்னாவில் உள்ள ராஜா திரையரங்கில் “பிகில்” திரைப்படம் திரையிடப்படவுள்ள நிலையில், அதிகாலையே வந்த விஜய் ரசிகர்கள் பலர் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போன விரக்தியில் திரையரங்கை அடித்து சேதப்படுத்தினர். மேலும், திரையரங்கினுள் புகுந்து ஸ்க்ரீனையும் சேதப்படுத்திய அவர்கள் கேட்டை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். திரையரங்கு ஊழியர்களும் தாக்கபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தியேட்டார் நிர்வாக தரப்பில் இருந்து கூறியதாக தகவல்கள் வந்துள்ளன.