×

பாமக- தேமுதிக கட்சிகளால் பணத்தை இழக்கப்போகும் அதிமுக நிர்வாகிகள்… குழப்பத்தில் குமுறல்..!

2வது முறையாக பணம் கட்டி, அந்த வார்டு கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால், பணம் திரும்பவும் கிடைக்காது. தமிழகத்தில் ஜெயலலிதா உடல் நலம் குன்றியிருந்தபோது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து விருப்ப மனு மற்றும் அதற்கான கட்டணமும் பெறப்பட்டது. இந்நிலையில், வார்டுகள் சீரமைப்பு மற்றும் ஒதுக்கீடு உள்ளிட்ட சில முரண்பாடுகளை களைந்து விட்டு தேர்தல் நடத்த எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இதற்கிடையே ஜெயலலிதா மறைந்து விட, அதன்பின்னர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், எச்சரிக்கை செய்தும்
 

2வது முறையாக பணம் கட்டி, அந்த வார்டு கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால், பணம் திரும்பவும் கிடைக்காது.

தமிழகத்தில் ஜெயலலிதா உடல் நலம் குன்றியிருந்தபோது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து விருப்ப மனு மற்றும் அதற்கான கட்டணமும் பெறப்பட்டது. 

இந்நிலையில், வார்டுகள் சீரமைப்பு மற்றும் ஒதுக்கீடு உள்ளிட்ட சில முரண்பாடுகளை களைந்து விட்டு தேர்தல் நடத்த எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இதற்கிடையே ஜெயலலிதா மறைந்து விட, அதன்பின்னர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், எச்சரிக்கை செய்தும் தமிழக அரசின் அழுத்தம் காரணமாக தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை தள்ளிப் போட்டு வந்தது.

தற்போது நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றி காரணமாகவும், நீதிமன்ற நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது. இதனால், ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கு கட்டிய பணத்தை இதுவரை கட்சி தலைமை திரும்ப தரவில்லை. தற்போது மீண்டும் அதிமுக தலைமை பணம் கட்ட கூறியுள்ளது கவுன்சில் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்தவரை கூட்டணி கட்சியான பா.ஜனதா அதிக வார்டுகளை எதிர்பார்க்கும். வடமாவட்டங்களில் பாமக – தேமுதிக அதிக இடங்களை கோரும்நிலை உள்ளது. இதனால், 2வது முறையாக பணம் கட்டி, அந்த வார்டு கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால், பணம் திரும்பவும் கிடைக்காது. பணம் கட்டாமல் இருந்தால், வார்டு தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்காது என குழப்பத்தில் புலம்பி வருகின்றனர்.