×

பாஜகவுக்கு அதிகாரப் பைத்தியம்! வெளுத்து வாங்கும் சிவசேனா!

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிராவின் சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் கிடைத்துள்ளன. மற்ற இடங்களில் சிறிய கட்சிகளும், சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.இதனால் மகாராஷ்டிராஇல் எந்த கட்சியும் தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், பாஜகவுக்கு அதிகார மோகம் பைத்தியம் என்று சிவசேனா கட்சி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிராவின் சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44
 
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிராவின் சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் கிடைத்துள்ளன. மற்ற இடங்களில் சிறிய கட்சிகளும், சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.இதனால் மகாராஷ்டிராஇல் எந்த கட்சியும் தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.  இந்நிலையில், பாஜகவுக்கு அதிகார மோகம் பைத்தியம் என்று சிவசேனா கட்சி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது. 

ஒரு சமயத்தில் அண்ணன்-தம்பி போல உறவோடு இருந்த கட்சி, இன்று, பிஜேபியை 105 இடங்களை கொண்ட சுத்தி சுவாதீனம் இல்லாத கட்சி என்று கடுமையான வாரத்தைகளால் தாக்கி அதன் சாம்னா பத்திரிக்கையில் தலையங்கம் எழுதியிருக்கிறது. மேலும், மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு அமைக்கப் போகிறது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து, சிலருக்கு வயிற்று வலி வரத் தொடங்கியுள்ளதாகவும் சமனாவில் எழுதியுள்ளது. பாஜக, தங்கள் பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காக மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுகிறது என்றும், இந்த செயல் அவர்களின் மன நிலைக்கு ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ள சிவசேனா, மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மை இல்லாமல் ஆளுநரிடம் ஆட்சி அமைக்கும் கோரிக்கையை வைக்க முடியாமல் இருந்த பாஜக, தற்போது ஜனாதிபதியின் ஆட்சி திணிக்கப்பட்ட பின்னர், திடீரென பாஜக எவ்வாறு அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறுகிறது?என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

மகராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்கும் பட்சத்தில், புதிய அமைச்சரவையில் சிவசேனாவுக்கு 16 அமைச்சர் பதவிகளும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு 14 பதவிகளும், காங்கிரஸுக்கு 12 பதவிகளும் ஒதுக்கப்படுவதாக பேசி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போன்று சபாநாயகர் பதவி காங்கிரஸுக்கும், துணை சபாநாயகர் பதவி சிவசேனாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.