×

பா.ஜ.க.வில் சேருகிறார் கருணாஸ்?

பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தொடர்பாளராகவும் இருந்த குஷ்பூ பா.ஜ.க.வில் இணைந்த சூடு தணிவதற்குள், பிரபல நகைச்சுவை நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் பா.ஜ.க.வில் இணையப் போகிறார் என்ற பர,பரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் கருணாஸ். சென்னை நந்தனம் மற்றும் மாநிலக் கல்லூரியில் படித்து ‘பாப்’ பாடகர் மற்றும் நாட்டுப்புறப் பாடகராக வலம் வந்தார். 2001-ல் பிரபல இயக்குனர் ‘பாலா’வின் இயக்கத்தில் வெளிவந்த “நந்தா“படத்தில் இவர்
 

பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தொடர்பாளராகவும் இருந்த குஷ்பூ பா.ஜ.க.வில் இணைந்த சூடு தணிவதற்குள், பிரபல நகைச்சுவை நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் பா.ஜ.க.வில் இணையப் போகிறார் என்ற பர,பரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் கருணாஸ். சென்னை நந்தனம் மற்றும் மாநிலக் கல்லூரியில் படித்து ‘பாப்’ பாடகர் மற்றும் நாட்டுப்புறப் பாடகராக வலம் வந்தார். 2001-ல் பிரபல இயக்குனர் ‘பாலா’வின் இயக்கத்தில் வெளிவந்த “நந்தா“படத்தில் இவர் நடித்த “லொடுக்கு பாண்டி” கதாபாத்திரம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. இதைத் தொடர்து ‘பிதாமகன்’, ‘வசூல்ராஜா எம்.பி,பி.எஸ்’ என ஏராளமான படங்களில் நடித்து முன்னணிக்கு வந்தார் . ‘திண்டுக்கல் சாரதி’ என்ற வெற்றிப் படத்தையும் தயாரித்தார். இந்தக் கால கட்டங்களில் சன் தொலைகாட்சிக்கு மிக நெருக்கமாக இருந்தார்.கலாநிதி மாறனுடனும் நல்ல நட்பு வைத்திருந்தார்.


இந்த நிலையில் “முக்குலத்தோர் புலிப்படை” என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராக இருந்த கருணாஸ், சசிகலாவின் உதவியுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். இதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் கிடைத்து திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் 8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
பின்னர் அதிமுக இரண்டாக பிளவு பட்டபோது சசிகலா அணியில் இருந்தார்.

அடுத்து டி.டி.வி.தினகரன் அணிக்கு ஆதரவளித்தார். எடப்பாடி பழனிசாமி அரசை கடுமையாக எதிர்த்தார். பிறகு சமாதானமாகி தனது ஆதரவு எப்போதும்… எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்குத்தான் எனத் தெரிவித்து முதல்வரை சந்தித்தார்..
இந்த நிலையில் மதுரையில் உள்ள விமான நிலயத்திற்கு பசும்பொன்

முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். அப்படி பெயர் வைத்தால் தனது முக்குலத்தோர் புலிப்படையை பாஜகவோடு இணக்கத் தயாராக இருப்பதாக பாஜக மேலிடத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறாராம். விரைவிலேயே டெல்லி மேலிடம் மூலம் “கருணாஸின் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்ற அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. –இர. சுபாஸ் சந்திர போஸ்