×

பாஜகவில் இணையும் நடிகை விஜயசாந்தி?!

சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 1998 ஆம் ஆண்டு நடிகை விஜயசாந்தி பாஜகவில் சேர்ந்தார். நடிகை விஜயசாந்தி காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணையப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 1998 ஆம் ஆண்டு நடிகை விஜயசாந்தி பாஜகவில் சேர்ந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி, தள்ளி தெலங்கானா என்ற கட்சியை ஆரம்பித்தார். பின் இந்தக் கட்சியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைத்தார். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு மேடக் தொகுதியில்
 

சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 1998 ஆம் ஆண்டு நடிகை விஜயசாந்தி பாஜகவில் சேர்ந்தார்.

நடிகை விஜயசாந்தி காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணையப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 1998 ஆம் ஆண்டு நடிகை விஜயசாந்தி பாஜகவில் சேர்ந்தார். பின்னர்   அக்கட்சியிலிருந்து விலகி, தள்ளி தெலங்கானா என்ற கட்சியை ஆரம்பித்தார். பின் இந்தக் கட்சியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைத்தார். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆன இவர்  2014 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில் நடிகை விஜய சாந்தி பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக அவருடன் பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பேசி வந்தனர். பேச்சுவார்த்தை சுமூகநிலையை எட்டியதையடுத்து அவர் வரும் 8ஆம் தேதி பாஜகவில் இணைவார் என்று தெரிகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் பரிட்சயமான விஜய சாந்தியை அம்மாநில  நட்சத்திர பேச்சாளராக நியமிக்க இருப்பதாக பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.