×

பாஜகவில் இணைகிறார் ஓ.பி.எஸ் மகன்..? பதவிக்காக ஓ.பி.ரவீந்திரநாத் எடுத்த அதிரடி முடிவு..!

அப்பாவுக்காக இரண்டு ஆண்டு அதிமுக ஆட்சிகாலம் முக்கியமா? அல்லது தனக்கான ஐந்தாண்டு மத்திய அமைச்சர் பதவி முக்கியமா? என்பதில் தெளிவாக இருக்கிறார் ரவீந்திரநாத். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராக முடியவில்லை. இதனால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் ஓ.பி.ஆர். அதிமுகவில் இருக்கும் வரை மத்திய அமைச்சராவதற்கு எடப்பாடி தரப்பு முட்டுக்கட்டை போடும். ஆகையால் பாஜகவுக்கு தாவி அமைச்சர் பதவியை பிடித்து விடலாம் என யோசித்து வருகிறாராம் ரவீந்திரநாத்.
 

அப்பாவுக்காக இரண்டு ஆண்டு அதிமுக ஆட்சிகாலம் முக்கியமா? அல்லது தனக்கான ஐந்தாண்டு மத்திய அமைச்சர் பதவி முக்கியமா? என்பதில் தெளிவாக இருக்கிறார் ரவீந்திரநாத்.

தமிழகத்தில்  அதிமுக-  பாஜக  கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராக முடியவில்லை. இதனால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் ஓ.பி.ஆர். அதிமுகவில் இருக்கும்  வரை மத்திய அமைச்சராவதற்கு எடப்பாடி தரப்பு முட்டுக்கட்டை போடும். ஆகையால் பாஜகவுக்கு தாவி அமைச்சர் பதவியை பிடித்து விடலாம்  என யோசித்து வருகிறாராம் ரவீந்திரநாத். 

அவர் அதிமுகவில் இருந்து வெற்றிபெற்று பாஜகவுக்கு தாவினாலும் கட்சித் தாவல் சட்டம் அவர் மீது பாயாது.  அதிமுகவில் அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறார்.  அதனால் அவர் தன்னிச்சையாக எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்க முடியும். சமீபத்தில் தெலுங்கு தேச எம்பிக்கள் 4 பேர் பாஜகவில் இணைந்தனர். இவர்கள் அரசியலமைப்பு சட்டம் 10 வது அட்டவணையின் கீழ், பாஜகவுடன் இணைய தீர்மானம் போட்டுள்ளனர்.

 

தீர்மானத்தை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மாநிலங்களவை தலைவர் வெங்கய்யாநாயிடுவுக்கு  அனுப்பி இருக்கிறார். ஒரு அரசியல் கட்சியில் மூன்றில் ஒரு பங்கு பேர் வெளியே சென்றால் கட்சித்தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது.  எனவே ரவீந்திரநாத்தும் பாஜகவில் இணைந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

ரவீந்திரநாத் பாஜகவில் இணைகிறாரா? அல்லது அதிமுகவில் தொடர்வாரா? என்பது எடப்பாடி முட்டுக்கட்டை போடுவதை பொறுத்து இருக்கிறது. ஆனாலும் இரண்டில் ஒன்று பார்த்து விடுவதில் தீர்க்கமாக இருக்கிறாராம் ரவீந்திரநாத். பின்னே.. அப்பாவுக்காக இரண்டு ஆண்டு அதிமுக ஆட்சிகாலம் முக்கியமா? அல்லது தனக்கான ஐந்தாண்டு மத்திய அமைச்சர் பதவி முக்கியமா? என்பதில் தெளிவாக இருக்கிறார் ரவீந்திரநாத்.