×

பாஜகவால் எடப்பாடிக்கு பலத்த அடி… துன்பத்தில் தவிக்கும் அதிமுக..!

கிராம அளவிலும் மெதுவாக அதிமுக ராஜ்யசபாவில் ஆதரவு அளித்தது தான் இத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்பதை மெதுவாக ஏற்கும் வகையில் மக்களின் மனநிலை மாறி இருப்பதாக அதிமுக தலைமைக்கு வந்த அறிக்கைகள் கூறுகின்றன. உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை ஒதுக்கும் வேலையில் அதிமுக தரப்பு இறங்கிவிட்டது. வட மாநிலங்களில் தொடர் தோல்வி. குடியுரிமை திருத்த சட்ட மசோதா போன்றவற்றால் பாஜகவின் இமேஜ் பயங்கரமாக டேமேஜ் ஆகி இருக்கிறது. தொடர் தோல்விகளால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இப்போதைக்கு காங்கிரஸ் போடும் ஒவ்வொரு
 

கிராம அளவிலும் மெதுவாக அதிமுக ராஜ்யசபாவில் ஆதரவு அளித்தது தான் இத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்பதை மெதுவாக ஏற்கும் வகையில் மக்களின் மனநிலை மாறி இருப்பதாக அதிமுக தலைமைக்கு வந்த அறிக்கைகள் கூறுகின்றன.

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை ஒதுக்கும் வேலையில் அதிமுக தரப்பு இறங்கிவிட்டது. வட மாநிலங்களில் தொடர் தோல்வி. குடியுரிமை திருத்த சட்ட மசோதா போன்றவற்றால் பாஜகவின் இமேஜ் பயங்கரமாக டேமேஜ் ஆகி இருக்கிறது. தொடர் தோல்விகளால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இப்போதைக்கு காங்கிரஸ் போடும் ஒவ்வொரு அரசியல் பந்தும் ‘டாட்’ பாலாக மாறி பாஜகவை அச்சுறுத்தி வருவதாகதேசிய அளவில் பேசப்படுகிறது.

தமிழக அளவில் பாஜகவின் திட்டங்களை அதிமுகவின் திட்டங்களாக மக்கள் நினைத்ததால் தான் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தோம். அதேபோல குடியுரிமை திருத்த சட்டத்தையும் நாம ஆதரித்தால் தான் ஜெயித்ததாக மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு அடி பலமாக இருக்கிறது.

அதனால்தான் உள்ளாட்சி தேர்தலில் நாம் அவர்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டாம். அவர்கள் நமக்கு பிரசாரம் செய்ய வேண்டாம். அவரவர்கள் தேர்தல் பணியை அவர்களே கவனித்துக் கொள்ளட்டும். நாம் ஒதுங்கிக் கொள்ளலாம் என்று உயர்மட்ட அளவில் முடிவு எடுத்து இருக்கிறார்கள். நகர்புறங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கிராம அளவிலும் மெதுவாக அதிமுக ராஜ்யசபாவில் ஆதரவு அளித்தது தான் இத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்பதை மெதுவாக ஏற்கும் வகையில் மக்களின் மனநிலை மாறி இருப்பதாக அதிமுக தலைமைக்கு வந்த அறிக்கைகள் கூறுகின்றன.