×

பாஜக வாக்குறுதியை காப்பாற்ற தயாராகும் சூர்யா… காமராஜர் வழியில் அதிரடி அரசியல்..!

பாஜகவினர் கூறியது போல் தற்போது தமிழகம் எங்கும் சூர்யா ரசிகர்கள் மிகப்பெரிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மெல்ல தனது படங்களில் அரசியலை புகுத்தி வருகிறார் சூர்யா. உண்மையில் அவரை அரசியலுக்கு இழுத்து வந்து விடும் போல பாஜக. அண்மையில் என்.ஜி.கே படத்தில் சூர்யா முதல்வராக ஏற்பார். இரண்டு ஆளும் , எதிர்கட்சிகளை எதிர்த்து களம் கண்டவர் இறுதியில் பெரும்பான்மை இல்லாத முதல்வராக பதவி ஏற்பதாக திரைக்கதை இருக்கும். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் அரசியலில்
 

பாஜகவினர் கூறியது போல் தற்போது தமிழகம் எங்கும் சூர்யா ரசிகர்கள் மிகப்பெரிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

மெல்ல தனது படங்களில் அரசியலை புகுத்தி வருகிறார் சூர்யா. உண்மையில் அவரை அரசியலுக்கு இழுத்து வந்து விடும் போல பாஜக. 

அண்மையில் என்.ஜி.கே படத்தில் சூர்யா முதல்வராக ஏற்பார். இரண்டு ஆளும் , எதிர்கட்சிகளை எதிர்த்து களம் கண்டவர் இறுதியில் பெரும்பான்மை இல்லாத முதல்வராக பதவி ஏற்பதாக திரைக்கதை இருக்கும். 

ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் அரசியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது. ஆனாலும், அதனை அவர் மறுக்கவில்லை. இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா கடுமையாக விமர்சித்தார். என்ன மயிருக்கு என்று பேசி விட்டு அதனை கெட்டவார்த்தை என சொல்லி திரும்ப பெற்றுக் கொண்டார். 

அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக அவருக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்தது. சூர்யா பேசியது அவரது சுய லாபத்துக்காவும், இலவச விளம்பரம் தேடவும் தான் என விமர்சித்தது பாஜகவும், அதிமுகவும். இதனையடுத்து சூர்யா விரைவில் தேடிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்றும் அதனால் தான் அரசியல் நோக்கத்துடன் பாஜகவை விமர்சனம் செய்வதாக கூறப்பட்டது. பாஜகவினர் கூறியது போல் தற்போது தமிழகம் எங்கும் சூர்யா ரசிகர்கள் மிகப்பெரிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். காமராஜர் மற்றும் அப்துல் கலாம் படத்தினையும் பின்னால் இணைத்துள்ளனர்.  அதில் கல்விக்காக போட்ராடும் போராளியே என்றும் புகழ்ந்துள்ளனர். 

சூர்யாவின் பிறந்த நாள் போஸ்டராக இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் இல்லாதது போல் அரசியலுக்கு வா தலைவா என்று அழைத்து ஒரே மாதிரியாக தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது சூர்யா அரசியலில் இணைவார்  என பாஜக கூறியது நிஜமாகி விடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.