×

பாஜக போடும் பக்கா ப்ளான்… திமுகவுக்கு ஷாக் கொடுக்க அதிரடி வியூகம்..!

வேலூர் தேர்தல் தொடர்பான தகவல்களை பிரதமரிடம் கொடுக்க இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகே வேலூர் தொகுதியில் ஸ்ட்ராங்காக களமிறங்கி தேர்தல் பணிகளை கவனிக்க இருக்கிறது அதிமுக என்கிறார்கள். வேலூர் தொகுதியை வில்லாக தங்கள் பக்கம் வளைக்க திமுகவும் அதிமுகவும் கடும் பிரயத்தனப்பட்டு வியூகங்களை வகுத்து வருகின்றன. 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற தெம்போடு துரைமுருகன் மகனை களமிறக்கி இருக்கிறது திமுக. பெரும் பணபலத்தையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் பக்க பலமாக வைத்து மோதுகிறார் ஏ.சி.சண்முகம். அதிமுகவை
 

வேலூர் தேர்தல் தொடர்பான தகவல்களை பிரதமரிடம் கொடுக்க இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  அதன் பிறகே வேலூர் தொகுதியில் ஸ்ட்ராங்காக களமிறங்கி தேர்தல் பணிகளை கவனிக்க இருக்கிறது அதிமுக என்கிறார்கள். 

வேலூர் தொகுதியை வில்லாக தங்கள் பக்கம் வளைக்க திமுகவும் அதிமுகவும் கடும் பிரயத்தனப்பட்டு வியூகங்களை வகுத்து வருகின்றன. 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற தெம்போடு துரைமுருகன் மகனை களமிறக்கி இருக்கிறது திமுக. பெரும் பணபலத்தையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் பக்க பலமாக வைத்து மோதுகிறார் ஏ.சி.சண்முகம். 

அதிமுகவை நம்பி மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளை கோட்டை விட்டது பாஜக. இந்த முறை அதிமுகவை நம்பி பலன் இல்லை என்பதால் வேலூர் தொகுதி மீது நேரடி பார்வையை வீச திட்டமிட்டுள்ளது பாஜக.

 

பாஜக தரப்பில் இருந்து அதிமுகவுக்கு அது தொடர்பான கட்டளை பறந்திருக்கிறது. அதில், ‘’38 தொகுதிகளில் ஒற்றைத் தொகுதியை மட்டும் தான் கைப்பற்றினோம். வேலூரை வெற்றி கொள்ளவில்லை என்றால் தமிழகத்தில் அதிமுகவும்,  மத்தியில் பாஜகவும் ஆட்சியில் இருந்து எந்தப்பயனும் இல்லை. ஆகையால்  நாங்கள் போட்டுக்கொடுக்கும் திட்டப்படி வேலை பாருங்க அதுவே போதும்.

பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். வேட்பாளர்கிட்ட பேசிட்டோம். செலவுகள் அத்தனையும் அவரே பார்க்கிறேன்னு சொல்லி விட்டார். அதையும் தாண்டி என்ன செய்ய வேண்டுமோ அதையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.  நீங்கள் அதை செய்ய ஆட்களை அனுப்பி வைத்தால் மட்டும் போதும்.  பிரதமர் அத்திவரதர் தரிசனத்துக்கு வரும் அதே நாளில் முதல்வர், அமைச்சர்கள் என அத்தனை பேரும் காஞ்சிபுரத்தில் இருப்பார்கள். அங்கே வேலூர் தேர்தல் தொடர்பான தகவல்களை பிரதமரிடம் கொடுக்க இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  அதன் பிறகே வேலூர் தொகுதியில் ஸ்ட்ராங்காக களமிறங்கி தேர்தல் பணிகளை கவனிக்க இருக்கிறது அதிமுக என்கிறார்கள்.