×

பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது நாடாளுமன்றத்தை ஒரு மாதம் முடக்கினாங்க.. இப்பம் எங்கள கேள்வி கேட்குறாங்க.. சிவ சேனா

பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல்கள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தை ஒரு மாத காலம் முடக்கினாங்க, ஆனால் இப்போது எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினால் கேள்வி கேட்கிறாங்க என்று சிவ சேனா எம்.பி. விமர்சனம் செய்தார். சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, 2ஜி ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல் குறித்து விசாரணை மற்றும் விவாதத்தை நடத்தக்கோரி அவர்கள் நாடாளுமன்றத்தை ஒரு மாத
 

பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல்கள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தை ஒரு மாத காலம் முடக்கினாங்க, ஆனால் இப்போது எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினால் கேள்வி கேட்கிறாங்க என்று சிவ சேனா எம்.பி. விமர்சனம் செய்தார்.

சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, 2ஜி ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல் குறித்து விசாரணை மற்றும் விவாதத்தை நடத்தக்கோரி அவர்கள் நாடாளுமன்றத்தை ஒரு மாத காலம் செயல்பட அனுமதிக்கவில்லை. பல்வேறு பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகளின் சத்தத்தை மத்திய அரசு இப்போது ஏன கேள்வி எழுப்புகிறது? மோடி அரசு பொய் வாக்குறுதிகள் கொடுப்பதில் வல்லது.

பா.ஜ.க.

பெகாசஸ் ஒரு தீவிரமான விஷயம். இந்த விஷயம் விவாதிக்கப்படும் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் உண்மையில் அது எப்போது விவாதிக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. இன்று இரண்டு அவைகளிலும் தடை உத்தரவு கொடுத்துள்ளோம். எதிர்க்கட்சிகளால் எழுப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு தேதி கொடுக்கப்பட்டால், நாடாளுமன்றம் செயல்பட மற்றும் சபையில் ஒழுங்கை பராமரிக்க நாங்கள் அனுமதிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரவிந்த் சாவந்த்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை ஒரு நாள் கூட அவைகளில் நடவடிக்கைகள் முழுமையாக நடக்கவில்லை. பெகாசஸ், விவசாயிகள் பிரச்சினை, எரிபொருள் விலை உயர்வு உள்பட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.