×

பள்ளி- கல்லூரிகளில் இந்து மாணவிகளின் காதலைத் தடுக்க லவ் ஜிகாத்… பாஜகவின் புதிய அமைப்பால் நடுக்கம்..!

ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் ‘லவ் ஜிகாத்தை’ தடுப்பதற்காக மாணவிகளை கண்காணிக்க 10 பேர் கொண்ட எச்ஒய்எப் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியுள்ளன. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஏற்கனவே பல்வேறு மாணவர்கள் அமைப்புகள் இயங்கி வரும் நிலையில் புதிதாக எச்ஒய்எப் என்ற பெயரில் இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி என்ற அமைப்புகள் துவங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்துமத கலாச்சாரம், நீதி கல்வி, பண்பு பயிற்சி, வரலாறுகள், சுதந்திர போராட்ட நிகழ்வுகள், தாயகப்பணி, தற்காப்பு
 

ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் ‘லவ் ஜிகாத்தை’ தடுப்பதற்காக மாணவிகளை கண்காணிக்க 10 பேர் கொண்ட எச்ஒய்எப் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியுள்ளன.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஏற்கனவே பல்வேறு மாணவர்கள் அமைப்புகள் இயங்கி வரும் நிலையில் புதிதாக எச்ஒய்எப் என்ற பெயரில் இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி என்ற அமைப்புகள்  துவங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 
இந்துமத கலாச்சாரம், நீதி கல்வி, பண்பு பயிற்சி, வரலாறுகள், சுதந்திர போராட்ட நிகழ்வுகள், தாயகப்பணி, தற்காப்பு கலைகள் என்று பல்வேறு பயிற்சிகள் இந்த அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு  பள்ளி, கல்லூரியிலும் ‘லவ் ஜிகாத்தை’ தடுப்பதற்காக மாணவிகளை கண்காணிக்க 10 பேர் கொண்ட எச்ஒய்எப் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியுள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு இதன் மூலம் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியிலான மோதல்கள் வரும் என்று அச்சமடைந்துள்ளதாகவும், மாணவர்கள் மத, சாதி ரீதியில் அணி சேர்வதை தடுக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக  தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் தாமதமின்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்லூரி இயக்குநரகத்திற்கு அரசு சார்பில் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.