×

ப.சிதம்பரத்துக்கு வீட்டு உணவு வழங்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது..!

இன்று ப.சிதம்பரத்தின் காவல் முடிந்ததால் அமலாக்கத்துறையினர் அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்கும் படி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் உத்தரவிட்டார். அதன் படி, ப.சிதம்பரம் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று ப.சிதம்பரத்தின் காவல் முடிந்ததால் அமலாக்கத்துறையினர் அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல், ப.சிதம்பரத்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு
 

இன்று ப.சிதம்பரத்தின்  காவல் முடிந்ததால் அமலாக்கத்துறையினர் அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்கும் படி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் உத்தரவிட்டார். அதன் படி, ப.சிதம்பரம் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார். 

இன்று ப.சிதம்பரத்தின்  காவல் முடிந்ததால் அமலாக்கத்துறையினர் அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல், ப.சிதம்பரத்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வீடு உணவு வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிபதி  அஜய் குமார் குஹரிடம் கோரிக்கை  விடுத்தார்.  

அதன் பின்னர், ப.சிதம்பரத்தை மீண்டும் 15 நாட்கள் காவல் நீட்டித்து வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வரை காவலில் வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ப.சிதம்பரத்தின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு  ஏதாவது ஒரு வேளை மட்டும் வீட்டு உணவு அளிக்கலாம் என்று நீதிபதி அஜய் குமார் குஹர் உத்தரவளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.