×

ப.சிதம்பரம் முன்ஜாமீன் வழக்கு : உடனடி வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு நீதிபதி ரமணா மாற்றியுள்ளார். புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு நீதிபதி ரமணா மாற்றியுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கடந்த
 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு நீதிபதி ரமணா மாற்றியுள்ளார்.

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு நீதிபதி ரமணா மாற்றியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது,  305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கடந்த ஆண்டு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த  டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி  தாக்கல் செய்த மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. இதனால் அவர் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 

இன்று காலையில் நீதிபதி ரமணா முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், விவேக் தன்கா ஆகியோர் ஆஜராகினர். அப்போது வாதிட்ட  அவர்கள்,  இந்த வழக்கு விசாரணைக்காக எட்டு முறை ஆஜராகி விளக்கமளித்துள்ளோம். அப்படி இருக்கும் போது தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டனர். ஆனால் சி.பி.ஐ  தரப்பிலோ சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதி ரமணா, ‘இந்த மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்கிறேன்’ என்றார். ஆனால்  இதுகுறித்து  கூறிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,   அயோத்தி வழக்கு விசாரணை நடைபெற்றுவருவதால் உடனடியாக அந்த மனுவை விசாரிக்க முடியாது. பிற்பகல் 1 மணிக்கு முன்ஜாமீன் கோரி முறையிடலாம் ‘ என்று கூறியுள்ளார். அதன்படி இந்த வழக்கு ஒருமணிக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரிக்காத பட்சத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு  அனுப்பி வைப்பார் எனவும் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்திலும் சிதம்பரம் மனு தள்ளுபடியாகும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார் என்று பரவலாக பேசப்படுகிறது.