×

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…ஓபிஎஸ் மகன் மீது நடவடிக்கை எடுங்கள்!

அ.தி.மு.க உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோர் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராகப் பேசியிருந்தனர். முத்தலாக் தடைக்கு ஆதரவாகப் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மக்களவையில் இதற்கான விவாதத்தின் போது பேசிய அ.தி.மு.க உறுப்பினர் ஓ.பி.ரவிந்திரநாத், ‘இந்த மசோதா பெண்களுக்குச் சம உரிமை வழங்கும்’ என்று பேசினார். அதேசமயம் மாநிலங்களவையில் பேசிய
 

அ.தி.மு.க உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோர் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராகப் பேசியிருந்தனர்.

முத்தலாக் தடைக்கு ஆதரவாகப் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு  மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மக்களவையில் இதற்கான விவாதத்தின் போது பேசிய அ.தி.மு.க உறுப்பினர் ஓ.பி.ரவிந்திரநாத், ‘இந்த மசோதா பெண்களுக்குச் சம உரிமை வழங்கும்’ என்று பேசினார்.  அதேசமயம் மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோர் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராகப் பேசியிருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனியார்  தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, ‘முத்தலாக் தடை மசோதாவை ஆதரித்துப் பேசிய ஓ.பி.ரவிந்திரநாத் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதுபோன்று ஓ. பன்னீர்செல்வமே  பேசியிருந்தாலும் தவறு தவறுதான்’ என்றார். இந்த  விவகாரம் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.