×

நாலு சுவத்துக்குள்ள நடந்ததை வீடியோ எடுத்து அசிங்கப்படுத்துறாங்க… டி.டி.வி.தினகரன் மீது பகீர் குற்றச்சாட்டு..!

அமமுகவில் தன்னை அசிங்கப்படுத்த கட்சியின் ஐடி.விங் செயல்படுவதாக சசிகலாவின் ஆதரவாளரும், அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். அமமுகவில் தன்னை அசிங்கப்படுத்த கட்சியின் ஐடி.விங் செயல்படுவதாக சசிகலாவின் ஆதரவாளரும், அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். அமமுகவில் டி.டி.வி. தினகரன் நடவடிக்கை பிடிக்காமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கடந்த 6ம் தேதி நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டார். இதுகுறித்த வீடியோ சமூக இணையதளங்களில் நேற்று வேகமாக பரவியது. இதனால், புகழேந்தி
 

அமமுகவில் தன்னை அசிங்கப்படுத்த கட்சியின் ஐடி.விங் செயல்படுவதாக சசிகலாவின் ஆதரவாளரும், அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அமமுகவில் தன்னை அசிங்கப்படுத்த கட்சியின் ஐடி.விங் செயல்படுவதாக சசிகலாவின் ஆதரவாளரும், அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

அமமுகவில் டி.டி.வி. தினகரன் நடவடிக்கை பிடிக்காமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கடந்த 6ம் தேதி நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டார். இதுகுறித்த வீடியோ சமூக இணையதளங்களில் நேற்று வேகமாக  பரவியது. இதனால், புகழேந்தி கட்சியை விட்டு வெளியேற உள்ளதாகவும் தகவல் பரவியது. 

இதுகுறித்து புகழேந்திகூறுகையில், ‘’கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோவை நிர்வாகிகள் முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள் மட்டும் அல்ல. அவர்கள் கட்சிக்காக சிறை சென்றவர்கள். கட்சியில் இருந்து நீக்கியது அவர்களுக்கு மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது.  

அவர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க என்ன காரணம் என  என்னிடத்தில் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். சசிகலாவிற்காகவே நாம் உள்ளோம். வேறு எங்கும் செல்ல வேண்டாம் என்று அவர்களிடம்  ஆறுதல் கூறினேன். இது தவறா?

எனக்கு தெரியாமல் இதுகுறித்த வீடியோவை எடுத்து அ.ம.மு.க ஐ.டி.விங்கே சமூக வலைதளத்தில் வெளியிட்டது எந்த விதத்தில் நியாயம்? கஷ்டமான காலகட்டத்தில் நான் கட்சிக்காக போராடியது அனைவருக்கும் தெரியும். இதை கட்சி தலைமை மறுக்க முடியாது. 4 பேர் ஒரு அறையில் பேசுவதை நாடு முழுவதும் பரப்புவதற்கு காரணம் என்ன?  அப்படி என்றால் எனக்கு கட்சியில்  சுதந்திரம் கிடையாதா?  என்னை அசிங்கப்படுத்தவே அமமுக ஐ.டி.விங் செயல்படுவதாக எனக்கு கேள்வி எழுகிறது. ஒரு அறையில் பேசியதை எனக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிடுவதற்கு காரணம் என்ன? 

இதுபோன்று வீடியோ எடுத்தது தவறு. கட்சியை விட்டு எல்லோரும் வெளியேறிய பின்பும் அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும்  என்றே அவர்களை சந்தித்தேன். சசிகலாவிற்காகவே டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். ஐ.டி.விங் என்ற பெயரில் இதுபோன்ற பதிவை போடுவது நாகரிகமற்ற செயல். இதற்கு கட்சி தலைமை பதில் சொல்ல வேண்டும்.  நான் சசிகலாவிற்கு வேண்டியவன் என்பதால் கட்சியில் இருந்து புறக்கணிக்கப்படுகிறேனா, பழிவாங்கப்படுகின்றேனா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது’ என அவர் பொங்கியெழுகிறார்.