×

நான் மகானும் அல்ல: எடப்பாடி புனிதரும் அல்ல: டிடிவி தினகரன் விமர்சனம்!

தான் மகானும் அல்ல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனிதரும் அல்ல என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். கரூர்: தான் மகானும் அல்ல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனிதரும் அல்ல என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு தினகரன் அணியினருக்குப் பாதகமாகவும், எடப்பாடி அணியினருக்குச் சாதகமாகவும் மாறியுள்ள நிலையில், 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலைச் சந்திக்க தயார் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். முன்னதாக அதிமுகவில்
 

தான் மகானும் அல்ல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனிதரும் அல்ல என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

கரூர்: தான் மகானும் அல்ல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனிதரும் அல்ல என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு தினகரன் அணியினருக்குப் பாதகமாகவும், எடப்பாடி அணியினருக்குச் சாதகமாகவும் மாறியுள்ள நிலையில், 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலைச் சந்திக்க தயார் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். முன்னதாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற உறுப்பினர்களுக்கு இபிஎஸ்- ஓபிஎஸிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ‘நான்  மகானும் அல்ல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புனிதரும் அல்ல.  சிபிஐ விசாரணையைக் கண்டு முதலமைச்சர் பயந்து இருக்கிறார். தோல்வி பயம் காரணமாகவே, 18 பேரையும் ஓபிஸ் – இபிஎஸ் மீண்டும் அழைத்துள்ளார். தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள். 18எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து 3  நாள்களில் தெளிவாக தெரிவிப்போம் ‘ என்று கூறியுள்ளார்.